
இதனால் ஏற்படும் இழப்பை சமாளிக்க பெட்ரோல் விலையை அதிகரிக்க திட்டமிட்டிருந்த எண்ணெய் நிறுவனங்கள் 5 மாநில தேர்தல் காரணமாக முடிவை ஒத்திவைத்தன. தேர்தலுக்காக காத்திருந்தால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க வேண்டியதாகிவிட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறிவிட்டன.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1ரூ உயர்த்த திட்டமிட்டிருப்பதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஓரிரு நாளில் இது குறித்து அறிவிப்பு வெளியாகக்கூடும் என்று தெரிகிறது. குளிர்காலம் என்பதால் எண்ணெய் பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும், இதனால் கூடுதலாக கச்சா எண்ணைய் இறக்குமதி செய்யக்கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இழப்பை
ஈடுகட்ட பெட்ரோல் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை எனவும் கூறியுள்ள அந்த
நிறுவனங்கள் ஈரான் அணுத்திட்டம் குறித்த ஒப்பந்தம் சுமூகமாகியிருப்பதால் கச்சா
எண்ணையின் விலையில் சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அப்போது
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது