பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை நகரங்களை திணரடித்த த.மு.மு.க வின் டிசெம்பர் 6 ஆர்ப்பாட்டம்..!

1

வருடா வருடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் டிசெம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அதை கறுப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது வழக்கம். சென்ற வருடங்களைப் போல் இந்த வருடம் த.மு.மு.க சார்பாக தமிழகம் முழுவதும் 50 இடங்களில் இன்று நடைபெற்றது. 

தஞ்சையை பொறுத்தவரை தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு நடத்த தீர்மானிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து அதிரை மக்களை அழைத்து செல்வதற்க்காக 17 வாகனங்கள் வந்திருந்தது.

இது போன்று மதுக்கூரிலும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் பாப்பாநாடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது மர்ம நபர்கள் அந்த வாகணஙளின் மீது கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை கண்டிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் தாக்குதல் புரிந்தவர்களை கைது செய்யக்கோரி அதிரை மற்றும் மதுக்கூர் த.மு.மு.க வினரால் ஆர்ப்பாட்டம் நடத்தி தாக்குதல் புரிந்தவர்களை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து பட்டுக்கோட்டைக்கு விரைந்த காவல் துரை உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப் படுத்தி அனுப்பினர்.

இதனை தொடர்ந்து தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள், மாற்றுமத சகோதரர்கள் என அலைகடலென மக்கள் திரண்டனர். இதில் கலந்துக்கொண்ட பழ.நெடுமாறன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து த.மு.மு.க வின் முக்கய தலைவர்களும் தங்கள் எழுச்சியான் சொற்ப்பொழிவை நிகழ்த்தினர்.
















thanks to: adirai pirai asraf (for nice photos)

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment