அதிரை மக்களின் பல நாள் கனவு நனவாகிறது..!

0
 நமதூர் மக்களின் பல நாள் கனவான அதிரை குளங்களுக்கு C.M.P வாய்க்கால் வழியாக நீர் நிரப்பும் பணி இன்று இரவு துவங்கவுள்ளது. இதன் முதற்க்கட்டமாக அதிரை C.M.P வாய்க்கால் கடந்த இரண்டு நாட்களாக‌ தூர்வாரப்பட்டு வருகிறது. இன்று காலை அதிரை வள்ளியம்மை நகர் அருகே  இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. தற்பொழுது இப்பணி நமதூர் V.K.M. ஸ்டோர் அருகே  நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நமதூர் பேரூராட்ச்சி தலைவர் அஸ்லம் அவர்களும் அப்பகுதி மக்களும் சமுக ஆர்வலர்களும் அருகில் இருந்து கண்கானித்தவாறு உள்ளனர்.

மேலும் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் இன்று இரவு தண்ணீர் தண்ணீர் திறந்து விடப்பட இருப்பதாகவும், நமதூர் குளங்களுக்கு இன்ஷா அல்லாஹ் தண்ணீர் நாளை நிரம்ப இருப்பதாகவும் கூறினர்.

இந்த நாள் அதிரையின் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாளாகும். இது அதிரை நகரை முன்பு போல செழிப்படைய வைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. மேலும் இது ஒற்றுமைக்கு கிடைத்த பரிசாகும். சில நாட்களுக்கு முன் அதிரை சமுகஆர்வலர்கள் பலர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தது வெற்றியளித்தது என்று சொல்லலாம்.  மாவட்ட ஆட்சியரை சந்தித்த இந்த குழுவில் பல இயக்கங்களை சேர்ந்தவர்கள் இருந்தாலும் ஒன்று கூடி மனு அளித்தது இந்த முயர்ச்சிக்கு பலமாக அமைந்தது.

இதற்க்கு பெரிதும் உதவிகரமாக விளங்கியதில் அதிரை சேர்மன், அதிரை சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அதிரை ஊடங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.


எது எப்படியோ நாளை ஓரளவு நமதூர் நீர்நிலைகள் நிறம்பிவிடும். 3 வருடங்கள் நமதூர் குளங்களில் நீர் இல்லாததால் நமுதூரில் நிலத்தடி நீர் இன்றி பெரிதும் துயர் அடைந்திருப்போம். இதனால் நமக்கு நீரின் அருமை தெரிந்திருக்கும். இனியாவது நாம் தண்ணீரை வீண‌டிக்காமல் இருக்க முயர்ச்சிப்போம்.








































Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)