அதிரையின்
குளங்களுக்கு ஆற்று நீர் திறந்து விடப்பட்டு வழியில் வந்து கொண்டிருப்பது அனைவரும்
அறிந்ததே.
அது சமயம், சி.எம்.பி
வாய்க்காலை தூர்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொதுப்பணித்துறைக்கு
சொந்தமான இந்த வாய்க்கால் அகலம் சுருங்கி அதன் இயற்க்கை தன்மை இழந்து
பன்னெடுங்காலமாக ஆற்று நீர் செல்லாததால் கழிவு நீர் கால்வாயை போல்
காட்சியளிக்கிறது.
மக்களின்
அலட்சியத்தின் காரணமாகவும், ஆட்சியாளர்களின் கவனக்குறைவும் இதன் தன்மை மாறுவதற்கு
காரணம் என்றால் அது மிகையாகாது.
வீடுகளை எழில் மிகு
தோற்றத்தில் கட்டுவதற்கு முயற்சிக்கும் நம்மில் பலர், வீட்டின் சுகாதாரத்தை
பேணுவதில் அக்கறை காட்டுகிறார்களோ இல்லையோ சுற்றுப்புறத்தின் சுகாதாரத்தை காப்பதில்
அலட்சியம் காட்டுவது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
வீட்டை கட்டி
முடித்து அதன் கழிவு குழாய்களை சி.எம்.பி வாய்க்காலில் இணைத்ததின் காரணமாக
அவ்வாய்க்காலில் கழிவு நீர் மாசு படிந்து, தோண்ட தோண்ட கழிவு நீரின் ஊற்று மாறாமல்
ஆழமாக படிந்துள்ளது.
தூர்வாரிய பின்பும்
இந்த வாய்க்காலில் கழிவு நீர் கலக்குமானால், இதன் வழியே செல்லக்கூடிய ஆற்று நீர்
செக்கடி குளத்திலோ அல்லது ஆலடி குளத்திலோ படிந்து விடும்,
இதை ஆட்சியாளர்கள்
கவனத்தில் கொண்டு இந்த கழிவு நீருக்காக தனி வடிகாலோ அல்லது பாதாள சாக்கடையோ
அமைத்து சுற்றுப்புறச்சூழலை பேணிக்காக்க
முயற்சிக்க வேண்டும்.
இதை செய்ய தவறும்
பட்சத்தில், பிற்காலத்தில் செக்கடிக்குளத்திற்கோ அல்லது ஆலடி குளத்திற்கோ “செட்டியான்
குளத்தின்” நிலைமைதான் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கும்
வீண் செலவுகளுக்கும் ஆளாக நேரிடும்,
தயவு செய்து
ஆட்சியாளர்களும் குடியிருப்போரும் இதை கவனத்தில் கொண்டு செயல் பட்டு
சுற்றுப்புறத்தையும் சுகாதாரத்தையும் பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும்.




- அஹமத்
தௌபீக்

சிறந்த சமூகப்பார்வை
ReplyDeleteமக்கள் - மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியத்தை தைரியமாக சுட்டிக்காட்டியதற்கு நன்றி
டிஸ்கி :
இன்னிக்கு ராத்திரி கொசுத்தொல்லை ஜாஸ்தியா ஈக்கிம் :)
pottula adichaa maari padhivugala potu samooga avalangalai sutti kaatum valai thala nanbarukku vaalthukkal..
ReplyDelete