
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் டிசம்பர் 28ம் தேதி நடைபெறுகின்றது.
இதையொட்டி முஸ்லிம் லீக் மாணவரணி (MSF), இளைஞர் அணி (MYL) , தொழிலாளர் அணியினர் (STU) பல்லாயிரக்கணக்கில் பங்கேற்கும் "இளம் பிறை பேரணியும்' நடக்கிறது. பெரும் எண்ணிக்கையில் செயல் வீரர்கள் பங்கேற்பதையொட்டி, காவல்துறை உயர் அதிகாரிகள் கேட்டுகொண்டதற்கிணங்க, ஏற்கனவே அறிவித்த இடத்திற்கு பதிலாக திருச்சி, தில்லை நகர் சாலைரோடு, கோஹினூர் தியேட்டர் அருகில் இருந்து ‘இளம்பிறை எழுச்சி பேரணி' புறப்பட்டு தென்னூர் உழவர் சந்தை மைதானத்தை சென்றைடையும் என்று திருச்சியில் இன்று நிருபர்களைச் சந்தித்த தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபுபக்கர் தெரிவித்தார்.

இப்பேரணியில் பங்கேற்பதை தவறவிட்டு விடாத வகையில் எவரும் தரும் தவறான தகவலையோ அல்லது வாகனங்களை தடுப்பதையோ பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் மேற்குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தமிழக முஸ்லிம்கள் தங்களது உரிய பிரதிநித்துவத்தைப் பெறுவதை இம்மாநாடு உறுதி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மாநாட்டு திடலையும் அவர் பார்வையிட்டார். பேட்டியின் போது மாநில செயலாளர் ஷாஜஹான் (கல்விப்பணி), நெல்லை மஜீத் (அமைப்பு செயலாளர்), மாநில துணைச் செயலாளர் திருச்சி G.M. ஹாஷிம் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் V.M.ஃபாரூக், செயலாளர் K.M.K. ஹபீபுர் ரஹ்மான், ஆடுதுறை ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.
நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரையில் 4 தொகுதி களை முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதும், அதில் இரண்டு தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தர வேண்டும் என்பதும் எங்கள் நிலைப்பாடு. இத் தொகுதிகள் குறித்து நாங்கள் ஆய்வு மேற் கொண்டு வருகிறோம். எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் நாங்கள் `ஏணி’ சின்த்தில் தேர்தலை சந்திப் போம்.

courtesy: lalpet express
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது