அதிரை மாணவர்களுக்காக "இளம் இஸ்லாமியன்" என்னும் மார்க்க அறிவு போட்டி..!

1
எதிர்வரும் ஜனவரி 15 ஆம் தேதி அதிரை மாணவர்களுக்காக "இளம் இஸ்லாமியன்" என்னும் மார்க்க அறிவு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை எந்தவொரு  அமைப்பும் இன்றி அதிரை இளைஞர்களின் முயர்ச்சியில் இன்ஷா அல்லாஹ் நடைப்பெற உள்ளது. 

நோக்கம்:

1. தற்பொழுது நமதூர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை எடுத்துக்கொண்டால் பலரும் உலக கல்வியின் மீது தான் ஆர்வமாக உள்ளனர்.

2. மேலும் பல மாணவர்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களை, வரலாறுகளை அறியாதவர்களாக உள்ளனர்.

3. எனவே நமதூர் மாணவர்களிடம் மார்க்க கல்வி மற்றும் மார்க்க சட்ட திட்டங்கள், வரலாறுகளை அறிய ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டியை நடத்த உள்ளோம்.

பரிசுகள்
பிரிவு-1
(6 முதல் 8 வகுப்பு வரை)
பிரிவு-2
(9 முதல் 11 வகுப்பு வரை)
முதல் பரிசு

இரண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு
3000 (மதிப்பிலான பொருள்)

2000 (மதிப்பிலான பொருள்)

1000 (மதிப்பிலான பொருள்)
3000 (மதிப்பிலான பொருள்)

2000 (மதிப்பிலான பொருள்)

1000 (மதிப்பிலான பொருள்)

விதிமுறைகள்:

1. 100 மதிப்பெண் கொண்ட போட்டியான இது எழுத்துமுறையில் நடைபெறும்.

2. இந்த போட்டிக்கான கேள்வி பதில் கொண்ட புத்தகத்தை அதிரை டிஜிடெக் கம்பியூட்டர்ஸில் பெற்றுக்கொள்ளவும்.

3. இந்த போட்டிக்கு தங்கள் பெயரை பதிவதற்க்கு அதிரை முகைதீன் பள்ளி அருகே உள்ள பூங்காவில் இம்மாதம் 28-30 தேதி காலை 10:00- 12:30, மதியம் 2:00- 3:30 மணி வரை.

புத்தகம் பெறும் இடம்: அதிரை டிஜிடெக் கம்பியூட்டர்ஸ், காதிர் முகைதீன் கல்லூரி எதிரில், அதிராம்பட்டினம்.

போட்டிக்கு முன்பதிவு செய்யும் இடம்: அதிரை முகைதீன் பள்ளி அருகில் உள்ள பூங்காவில்

போட்டி நடைபெறும் இடம்: A.L. மெட்ரிக் பள்ளி, அதிராம்பட்டினம்.

நாள்: 15- 01- 2014                    
நேரம்: காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை

மேலும் விபரங்களுக்கு: 9597773359, 7200563300, 7200364700, 8122848088



                                                                                                                       இங்ஙனம்,
                                                                                                    இளம் இஸ்லாமியன் கமிட்டி





Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அருமையான முயற்ச்சி...இளைஞர்களின் இந்த முயர்ச்சிக்கு என்றும் எனது ஆதரவு நிலைத்திருக்கும்..மாணவர்கள் இந்த தேர்வில் கலந்துக்கொண்டு பயன் அடையுங்கள்

    ReplyDelete
Post a Comment