பட்டுக்கோட்டை பகுதிகளில் காய்ந்த பயிர்களில் கால்நடைகளை மேயவிடும் அவலம் விவசாயிகள் வேதனை

0


பட்டுக்கோட்டை, : தண்ணீர் இன்றி காய்ந்த பயிர்களில் மாடுகளை மேய விடும் நிலை ஏற்பட்டுள்ள தாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றிய மாநாடு பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் ராஜராமலிங்கம் தலைமை வகித்தார். மாவ ட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பக்கிரிசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் வழி நடத்தினார்.


 மாநாட்டில் ஒன்றிய சங்கத்திற்கு 24 பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஒன்றியத் தலை வராக ராஜராமலிங்கம், துணைத் தலைவராக குஞ்சான், செயலாளராக கலியபெருமாள், துணைச் செயலாளராக அடைக்கலம், பொருளாளராக பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கக் கொடியை மாநிலக்குழு உறுப்பினர் நாதன் ஏற்றி வைத்தார். 

விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் ராமலிங்கம், மாதர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் தனசீலி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்டச் செயலாளர் காளிதாஸ், வழக்கறிஞர் பிரகாசம், ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், மாநிலக் குழு உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். மாநாட் டில் கல்லணைக் கால்வாய் கோட்டம் மூலம் முறையாக பாசன நீர் வழங்காததால் நேரடி நெல் விதைப்பு நாற்று கள் கருகிப் போனதுடன், மாடுகளை விட்டு மேய்க்கும் அவல நிலையும் ஏற்பட்டது. 

ஆழ்துளை கிணற்றில் டீஸல் என்ஜின் மூலம் இறைத்து சாகுபடி செய்தபயிர்களும் தற்போது காய்ந்து வருகிறது. இந்த ஒன்றியப் பகுதிகளில் வாய்க்கால்களில் நீர் வருவதற்கு உள்ள தடைகளை சரிசெய்து நீர் வழங்குவதுடன், முறையாக செயல்படாத துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 


குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், நீரில்லாமல் நிலங்களை தரிசாக போட்ட விவசாயி கள், உட்பட பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து போர்க் கால அடிப்படையில் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். அரசு அறிவித்தபடி கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர்தீவனம் இப் பகுதிகளில் வழங்கப்படவில்லை. அவற்றை உடன் வழங்கிடவும், கோமாரி உள்ளிட்ட நோய்களிலிருந்து கால்நடைகளைக் காத்திடவும், பாலை வாங்குபவர்கள் பாதித்திடா வண் ணம் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண் டும். 

உற்பத்தி செலவு மிகவும் அதிகரித்திருப்பதால் நெல் குவிண்டாலுக்கு ரூ.2ஆயிரத்து 500 என மத்திய, மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தென்னை மற்றும் இதர பயிர் சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் 100 % சொட்டு நீர் பாசன மானியத் திட்டத்தில் ஆழ் துளை கிணறு இருந் தால் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்ற முறை யைத் தளர்த்த வேண்டும். குளம், குட்டைகள் உள்ள விவசாயிகளுக்கும் வழங்கிட ஆவன செய்ய வேண்டும்.

 காட்டாறு மற்றும் வடிகால்களில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள தடுப்பணைகளை விரைவாக, தரமாகவும் கட்டுவதுடன் அதன் மூலம் அருகே உள்ள வேளாண் பகுதிகளுக்கு வாய்க் கால் அல்லது பம்பிங் மூலம் பாசனம் அளித்திட ஆவன செய்ய வேண்டும். 

தம்பிக்கோட்டை மறவக்காடு பாட்டுவனா ச்சி வடிகாலில் சுமார் 2 கி.மீ.தூரம் கடல் நீர் புகுந்து விட்டதால் அங்குள்ள ஆழ்துளை கிணறுகள் உப்பு நீராகி, அதன் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகிவிட்டன. உடனடியாக கடல் நீரை தடைசெய்ய தடுப்புச்சுவர் கட்டுவதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத்தலைவர் குஞ்சான் நன்றி கூறினார்.

coutesy:dinakaran

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)