திருச்சியில் இருந்து பாலக்காடு
செல்லும் பயணிகள் ரயில் நேற்று ஈரோட்டிற்கு 4.15 மணியளவில் வந்தது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனை அடைய சுமார் 100 அடி தூரம் இருக்கும்போது ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் இன்ஜினும், அதற்கு அடுத்த பயணிகள் பெட்டியும் தடம் புரண்டன. ரயில் மெதுவாக வந்ததால்
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ரயில் தடம் புரண்ட சப்தம் கேட்டு ரயில் பயணிகள் கூச்சலிட்டனர். தகவல் அறிந்ததும் உடனடியாக ஈரோடு எலக்ட்ரிக் லோகோ ஷெட்டில் இருந்து ரயில்வே ஊழியர்கள் வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.2 மணி நேரத்துக்கு பிறகு, தடம் புரண்ட ரயில் அங்கிருந்து கோவை புறப்பட்டு சென்றது.

Adiraipiraiwebist thanks
ReplyDelete