அதிரை உட்பட தஞ்சை முழுவதும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

0


இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கடந்த அக்டோபர் 1–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்குதல், இடமாற்றம் செய்தல், பிழை திருத்துதல் போன்ற மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

தஞ்சாவூர் வட்டத்தில் 12 ஆயிரத்து 460 பேரும், கும்பகோணம் வட்டத்தில் 12 ஆயிரத்து 775 பேரும், திருவிடைமருதூர் வட்டத்தில் 9 ஆயிரத்து 468 பேரும், பாபநாசம் வட்டத்தில் 10 ஆயிரத்து 847 பேரும், திருவையாறு வட்டத்தில் 11 ஆயிரத்து 9 பேரும், ஒரத்தநாடு வட்டத்தில் 9 ஆயிரத்து 539 பேரும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 8 ஆயிரத்து 788 பேரும், பேராவூரணி வட்டத்தில் 7 ஆயிரத்து 791 பேரும் ஆக மொத்தம் 82 ஆயிரத்து 677 பேரும் மனுக்கள் வரப்பெற்றன.

தேர்தல் பார்வையாளர் அருண்குமார், கும்பகோணம் வட்டத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இவ்விசாரணை முடிந்து இறுதி வாக்காளர் வரைவு பட்டியல் ஜனவரி 6–ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)