இளம்பிறை எழுச்சி மாநாட்டில்(இன்ஷா அல்லாஹ்) ஒலிக்க இருக்கும் அதிரையரின் பாடல் வரிகளும்; பாட்டின் ஒலியும்

0
பேரணி முழக்கம் இளையவர் ஒலிக்கப்
.....பெரும்புகழ்ப் பெருநகர் ஆங்குத்
தோரணம் போல கூட்டமாய் வீதி
...தோறுமே பச்சையின் வண்ணம்
வீரமும் தொண்டும் நிறைந்துளப் படையின்
.....வெற்றியைக் குறித்திடும் காட்சி
நேரமும் நெருங்கி வந்தது; வாவா
....நேர்மையின் நிகழ்வினை நோக்கி!



இறப்பிலோ நல்ல நிகழ்விலோ எம்மை
....இறைமறை நபிவழி இஜ்மா
மறந்திடா வண்ணம் நடைமுறை செய்ய
....மாண்புள முன்னவர் கூட்டம்
பிறப்புடன் எம்மைத் தொடந்திடும் மஹல்லா
....பிளவிலாச் சேவையைச் செய்யச்
சிறப்புடன் விருதை வழங்கிடும் நோக்கம்
,,,சிலிர்ப்புடன் காணலாம் வாவா!



புலமையோன் அருளால் பெரிதினும் பெரிதாய்ப்
......புகழ்பெறும் தாய்ச்சபை காக்கும்
தலைமையைக் காணத் திருச்சியில் கூடு
....தனிமையாய் ஏணியில் ஏற
நிலைமையைச் சொல்லும் வழிகளைக் கேட்க
...நீள்துயில் நீக்கியே செல்லு
மலையென உறுதி பெற்றிடக் கூறும்
....மாண்புளச் சொற்களைப் பேணு!


யாத்தோன்: அதிரை,“கவியன்பன்பன்” கலாம், (அபுதபி)
பாடியவர்: பாடகர் , அதிரை ஜஃபருல்லாஹ்(ஜித்தா)

இப்பாடலைக் கேட்கக் கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்குக:

http://www.youtube.com/watch?v=pffvAgsJH

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)