
தஞ்சை மாவட்டம் ,அதிராமப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரேம்நாத் (33). 2001ல் அங்கு நடந்த கோஷ்டி மோதலில் பிரேம்நாத் முக்கிய குற்றவாளியாக இருந் தார். அவர் மீது அதிராமப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடினர். தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து அவரை பற்றிய விவரங்களை அனைத்து விமான நிலையங்களுக்கும் தஞ்சை எஸ்பி கொடுத்தார். இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு அபுதாபியில் இருந்து எத்தியார்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பிரேம்நாத் சென்னை வந்தார். பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, தேடப்படும் குற்றவாளி என தெரிந்தது. அவரை தனி அறையில் வைத்து தஞ்சை மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவித்தனர்.
INFO:ADIRAI PIRAI KHAALID
நன்றி : தினகரன் .
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது