ஏடிஎம்களில்
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏராளமாக செலவு செய்ய வேண்டியிருப்பதால், கணக்கு
வைத்திருக்கும் வங்கி உட்பட எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே
பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ்
வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மை தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்களிலும் பணம் எடுத்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால், பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதால், தங்களுக்கு ஏற்படும் செலவை குறைப்பதற்காக 5 முறை மட்டுமே அதற்கு வங்கிகள் அனுமதி அளித்தன. 5 முறைக்கு மேல் பிற வங்கிகளில் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
வங்கிகள் அளித்த இந்த சலுகையை பொதுமக்கள் சரியாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது ஏடிஎம்மை பயன்படுத்துவதிலேயே சிக்கனம் வரப்போகிறது. அதாவது, கணக்கு வைத்திருக்கும் வங்கி உட்பட எல்லா வங்கி ஏடிஎம்மையும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலையை கொண்டு வர வங்கிகள் உத்தேசித்துள்ளன. இதற்கான பரிந்துரையை, இந்திய வங்கிகள் சங்கம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி உள்ளது.சமீபகாலமாக ஏடிஎம்களில் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அதிகளவில் செலவழிக்க வேண்டியிருப்பதால், இந்த சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம் தன்னுடைய பரிந்துரையில் கூறியுள்ளது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது