திரும்பி வாரா நொடிகள்...(பாமுகம் 748 வது வாரம் வியாழன் கவிதை நேரம்)

0
மடிநீங்கும் பாலும் மடிநோக்கிப் போகா;
நொடிநீங்கும் காலம் நுழையக் - கடிகார
முட்களாய் மீண்டும் முயன்றாலும் வாராத
உட்புகாத் தன்மைதான் உள்ளு.



வாய்ப்புகள் என்னும் வசந்த நொடிகளும்
காய்ப்பதும் பின்னர்க் கனிந்தபின்- தேய்வதும்
ஆகிய நற்பருவம் ஆங்குக் கழிவதும்
ஏகியப் பின்னர் இரா.



கைவிட்ட பின்னரே கைசேதம் என்றுதான்
பொய்கூட்டிப் பேசிடும் போதினில் - செய்யும்
வழிகளைச் சொன்னால் மனத்தினில் சோம்பற்
குழிகளைத் தோண்டும் குணம்.


காலமும் நம்மிடம் கண்போன்ற தென்றுதான்
ஞாலமும் கண்டநம் ஞானிகள் -- சீலமும்
பற்றிடச் சொன்னதைப் பற்றி  நினைத்திடப்
பற்றுடன் சொல்லவிப் பா.



உண்ட சுவையும்  உடுத்திக் கிழித்ததும்
கண்டு மகிழ்ந்ததும் காணோமே- தொண்டு
புரிந்த நொடிகளே புண்ணியமாய் நீண்டு
வரிந்து திரும்பி வரும்..







யாத்தோன்: அதிரை கவியன்பன் கலாம், அபுதபி

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)