அதிரையில் குழந்தைகளுக்கு நாளை முதல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது

0
அதிரை உட்பட‌ தஞ்சை மாவட்டத்தில் லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார்.
கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்றுகாலை நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பையன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தஞ்சை மாவட்டத்தில் போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தமிழகஅரசு தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 19–வது சுற்றின் முதல் கட்டமாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 402 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்கள் என நகர பகுதிகளில் 128 மையங்களும், ஊரக பகுதிகளில் 1,382 மையங்களும் என மொத்தம் 1,510 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

 daily thandhi

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)