அதிரையில் கேஸ் சிலின்டருக்கு பதிவதற்காக வங்கிகளில் குவிந்த பொதுமக்கள்

0
அதிரையில் இன்டேன் கேஸ் சிலின்டருக்காக பதிவு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இனி வரும் காலங்களில் மானிய விலையில் கேஸ் சிலின்டர் பெற இன்று முதல் 1அம் தேதி வரை முன்பதிவு செய்யப்படும் எனவும் இதில் முன்பதிவு செய்ய தவறுபவர்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலின்டர்கள் வினியோகிக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்தது.

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் இந்திய அரசால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையின் காப்பியை எடுத்துக்கொண்டு தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் அளித்தால் அவர்கள் உங்களுக்கு ஒரு படிவத்தை தருவார்கள். அதை கொண்டு சென்று அதிரை இன்டேண் கேஸ் அலுவலகத்தில் அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.

ஆதார் அட்டை பெறாமல் சிரமப்படும் அதிரை மக்கள்:

மேல் கூறப்பட்ட முறை ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு வேண்டுமானால் எளிதாக முடிந்து விடும் ஆனால் பல பேருக்கு ஆதார் அட்டைகள் வினியோகிக்க படாமல் உள்ளதால் பல மக்கள் செய்வதறியாது உள்ளனர். இதற்க்கு மாற்று வழியாக அரசு வேறு ஏதாவது அடையாள அட்டையையும் அனுமதித்தால் நல்லது என ஆதார் அட்டை இல்லாதவர்கள் கூறுகின்றனர்.

வங்கிகளில் கால் வலிக்க காத்திருக்கும் மக்கள்:

சரி ஆதார் அட்டை உள்ளவர்கள் வங்கிகளுக்கு சென்று படிவத்தை பெறுவதற்க்கு சென்றால் அங்கு வார இறுதி நாள் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வங்கிகளில் மக்கள் கால்கடுக்க காத்திருந்து படிவத்தை பெற்று சேல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிரை இந்தியன் வங்கியில் குழப்பம்:


கேஸ் பதிவதற்க்காக அதிரை சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார். அவரிடம் வங்கி ஊழியர்கள் 21ஆம் வார்டு வாசிகளுக்கு இந்த வங்கியில் பதியப்படாது. இங்கு அதிரை 1 முதல் 5ஆம் வார்டு வரை உள்ளவர்களுக்கு மட்டுமே இங்கு முன்பதிவு செய்யப்படும். மற்ற இந்தியன் வங்கியில் கண‌க்கு வைத்திருக்கும் மற்ற வார்டு மக்கள் பட்டுக்கோட்டையில் சென்று படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவதாகவும் அந்த நபர் தெரிவித்தார். இதனால் இந்தியன் வங்கியில் கண‌க்கு வைத்திருக்கும் மற்ற வார்டு மக்கள் அதிர்ப்தி டைந்துள்ளனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)