அபுதாபி சென்னை நேரடி விமான சேவையை ஏர்
இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்
நிறுத்திய பின்பு சென்னை பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில்
கடந்த 19/09/2013 அன்று அமீரக காயிதெமில்லத் பேரவையின்
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அபுதாபி வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களிடம் மீண்டும் அபுதாபி – சென்னை
நேரடி விமான சேவையை ஏற்படுத்த முயற்சி கொள்ள வேண்டி அபுதாபி தமிழ்ச் சங்கம், அய்மான்
சங்கம் ஆகிய அமைப்புக்களின் வேண்டுகோள் அடங்கிய கடிதத்துடன் அமீரக காயிதெமில்லத் பேரவையும் வலியுறுத்தி ஒரு மனுவை அளித்தது.
அதை
பெற்றுக் கொண்ட M.அப்துல்
ரஹ்மான் எம்.பி தொடர்ந்து இந்த விஷயத்தில் தன்னுடன் தொடர்பில் இருக்குமாறு
கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவ்வப்போது அவரின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது.
நமது கோரிக்கையை
அதற்குரிய அதிகாரிகளுக்கு அனுப்பி தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் மூலமாக ஜெட்
ஏர்வேஸ் விமான நிறுவனம் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளது.
அதன்
அடிப்படையில் 16/01/2014 புதன் கிழமை
முதல் தினதோறும் காலை 10:15 மணிக்கு
அபுதாபியில் இருந்து சென்னை நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் பயணமாகும்.
அபுதாபி
வாழ் தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்களுக்கும், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கும் மனமார்ந்த நன்றிஅன்புடன், நிர்வாகிகள்.
அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி.
info: adirai jamal (muslim league)


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது