பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத்தேர்வு கடந்த மாதம் 23ம் தேதி முடிவடைந்த நிலையில் 24 முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. 9 நாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் மாணவர்கள் உற்ச்சாகத்துடன்
ஆட்டம் பாட்டம் கொண்டாடம் என விடுமுறை நாட்களை விளையாடி கழித்தனர்.
2ம் தேதியான இன்று காலை மாணவர்கள் பள்ளி விடுமுறை என கருதி தூங்கி
விழித்தவுடன் கையில் கிரிக்கெட் மட்டையையும், கால்பந்தையும் திடலுக்கு விளையாட எடுத்துச்செல்லவிருந்தனர்.
அதற்கு,
பெற்றோர்: எங்கடா
கிளம்பிட்டிங்க காலங்காத்தால?
பிள்ளைகள்: விளையாடத்தான்
பெற்றோர்: இன்னகி
பள்ளிகூடமிருக்கு தெரியும்ல?
பிள்ளைகள்: இன்னகி
ஸ்கூல் லீவுமா அதான் விளையாடபோறோம் பெற்றோர்: விளையாட்டுங்கடையாது
ஒன்னுங்கடையாது ஸ்கூலுக்கு போங்கடா போங்க
பின்னர் மாணவர்கள் மிக வருத்தத்துடன் பள்ளிக்கு சென்றனர்

This comment has been removed by a blog administrator.
ReplyDelete