அதிரை அமீரக TIYA வின் அமர்வு ( 03.01.2014 ) வெள்ளி கிழமை அன்று சகோதரர் சேக்காதி
அவர்களுடைய இல்லத்தில் அமீரக TIYA வின் நிர்வாக குழு மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் அமர்வு தலைவர் முகமது மாலிக் அவர்கள் தலைமையில் மிக
சிறப்பான முறையில் நடை பெற்றது அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
1. நடைப்பெற்ற கூட்டத்தில் அமீரகTIYA அமைப்பிர்க்கு 2014 ஆண்டுக் கான புதிய நிர்வாகிகள் தேர்ந்து
எடுப்பது சம்மந்தமாக ஆலோசித்து வரும் 17.01.2014 வெள்ளிக்கிழமை அன்று பொது குழு கூட்டத்தை கூட்டி புதிய நிர்வாகிகள் தேர்வு
நடுத்துவதென முடிவு செய்யபட்டது.
2. நமது மஹல்லாவில் உள்ள நூல் நிலையம் சரியாக செயல்படாமல் இருப்பதாக நமக்கு வந்த
புகாரின் அடிப்படையிலும் நமது மஹல்லா இளைஞர்களின் நலனில் அக்கரையில் கவனத்தில்
கொண்டு பரிசிலிக்கப்பட்டது அதன் அடிப்படையில் தற்போது உள்ள அதே பெயரிலேயே
தொடர்ந்து செயல்படுத்துவதெனவும் சம்மந்தபட்ட நபர்களிடமும் தொடர்பு கொண்டு TIYA வின் முயற்ச்சியில் தொடர்ந்து நல்ல முறையில்
செயல்பட பாடுபடுவது என முடிவு செய்யபட்டது.
3. அமீரக TIYA வின் வட்டி இல்லா கடன் திட்டம் பற்றி
ஆலோசிக்கபட்டடு 2014 ஆண்டிலேயே நடைமுறை படுத்துவற்கான எல்லா திட்டங்களையும் அது சம்மந்தபட்ட எல்லா
வேலைகளையும் முடித்து 2014 புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைபதென முடிவு செய்யபட்டது.
இன்னும் பல மஹல்லா முன்னேற்றத்திற்கான
பயனுள்ள செய்திகள் கலந்துரையாடப்பட்டன இன்ஷா அல்லாஹ் இறைவன் கிருபையால் 17.01.2014 வெள்ளிக்கிழமை புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்துவதென முடிவு
செய்யபட்டது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது