தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு மன்றம் பிப் 12 முதல் நடைபெறவுள்ளது என்று முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டபணிகள் ஆணாய குழு தலைவருமான ஆர்.சேது ராமன் கூறியுள்ளார். இது குறித்து அவர் புதன் கிழமை அளித்த பேட்டியில் உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றம் ஆணையப்படி மாவட்ட சட்டப்பணி குழு மூலம் தேசிய மக்கள் நீதி மன்றம் நடத்தப்பட்ட உள்ளது.
இதை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட சட்ட பணி ஆணைய குழு அலுவலகத்தில் பிப் 12 முதல் ஏப்ரல் 12 வரை தொடர்ந்து நடைபெறும் இதில் வங்கி கடன், கல்விக் கடன், பிறப்பு இறப்பு சம்பந்த பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, ஜீவனாம்சம் வழக்கு, காசோலை மோசடி வழக்கு, பாகப்பிரிவினை போன்ற உரிமையால் வழக்கு சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்கு உட்பட பலவிதமான மக்கள் பிரச்சனைகள் தஞ்சை மாவட்ட சட்டப்பணி ஆணைய குழுவின் மக்கள் நீதி மன்றம் மூலம் சமாதானமாக தீர்த்து வைக்கப்படுகின்றன. வங்கி கடன்களில் சட்டத்துக்கு உட்பட்டு சலுகைகள் வழங்க இந்த மக்கள் நீதி மன்றம் மூலமாக முடிவடையும் போது அல்லது தீர்க்கப்படும் போது நீதி மன்றம் கட்டணம் செலுத்தவேண்டிய தேவை இல்லை .
இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வி என்பது கிடையாது, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவடையும் போது நீதி மன்ற கட்டணம் திரும்ப கிடைக்க உதித்தரவு இடப்படும் இந்த மன்றம் உதித்தரவுக்கு மேல் முறையீடு எதுவும் கிடையாது மோட்டார் வாகன வழக்குகளில் முடிவர்ற வழக்குகளுக்கு உடனடி இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் கடந்த ஆண்டு சுமார் 35.46 கோடி மதிப்புள்ள 25.352 வழக்குகள் தீர்வு காணப்பட்டன இதன் மூலம் 59.451 பயனாளிகள் பயன் அடைந்தனர் என்றார்.
தகவல்: நெய்னா முஹம்மது
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது