அதிரை மக்களுக்கு தட்டிக்கழிக்கப்படும் அரசின் இலவச பொருட்கள்..!

Editorial
0

கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்திற்கு புதி  ஆட்சி வந்தது. அப்போது தமிழக மக்களுக்கு கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி ஆகிய அடிப்படை தேவையுள்ள இந்த 3 பொருட்களை ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது.

இந்த வாக்குறுதி பல ஊர்களிலும் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு இலவச பொருட்கள் சென்றடைந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் நமதூருக்கு இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தட்டிக்கழிக்கப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இது போன்று தான் சென்ற ஆட்சியில் கூறப்பட்ட இலவச கேஸ் அடுப்பு மற்றும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஆகியனவற்றில் தொலைக்காட்சி அனைவருக்கும் வழங்கப்பட்டாலும் இலவச கேஸ் அடுப்பு அதிரையின் பல பகுதிகளில் வழங்கப்படவில்லை என்பது மற்றுமொரு குற்றச்சாட்டாக உள்ளது.

சென்ற ஆட்சியிலும் சரி தற்போதைய ஆட்சியிலும் சரி இதுபோன்ற அரசின் இலவச வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் நமதூர் பிற்படுத்தப்படுவது அல்லது தட்டிக்களிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு அதிரை மக்களுக்கு அரசின் இலவச பொருட்கள் கிடைக்க வகை செய்யுமாறு அதிரைபிறை.இன் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)