பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்
பெயரை கட்சியின் தலைவர் மு.க. கருணாநிதி வெளியிட்டுள்ளார். சென்னை
அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தி.மு.க. தலைவர் மு.
கருணாநிதி வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளார். முன்னதாக வேட்பாளர்களுக்கு
வெற்றியை தேடித்தருமாறு வேண்டுகொள் விடுத்தார். மேலும், வேட்பாளர் பட்டியல்
முழுமையானது என்று சொல்லமாட்டேன், திருத்தம் வரலாம் என்று கருணாநிதி
கூறியுள்ளார்.
வேட்பாளர்கள் விபரம்:
தென் சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
வடசென்னை - கிரிராஜா
மத்திய சென்னை - தயாநிதிமாறன்
தஞ்சாவூர் - டி.ஆர். பாலுவடசென்னை - கிரிராஜா
மத்திய சென்னை - தயாநிதிமாறன்
ஸ்ரீபெரும்புதூர் - ஜெகத்ரட்சகன்
கள்ளக்குறிச்சி - மணிமாறன்
சேலம் - உமாராணி
நாமக்கல் - காந்தி செல்வன்
திருப்பூர் - செந்தில் நாதன்
நீலகிரி - ஆ. ராசா
கோவை - பழனிகுமார்
தருமபுரி - தாமரைச் செல்வன்
திருவண்ணாமலை - சி.என். அண்ணாத்துரை
ஆரணி - ஆர். சிவானந்தம்
விழுப்புரம் - முத்தையன்
பொள்ளாச்சி - பொங்கலூர் பழனிச்சாமி
திருச்சி - அன்பழகன்
கரூர் - சின்னச்சாமி
கடலூர் - நந்தகோபால்

SS. பழனிமாணிக்கம் அவர்கள் தஞ்சாவூர் நாடாளுமன்ற வேட்பாளராக இருந்தபோது, அதிராம்பட்டினம் மக்களின் அடிப்படை தேவைகளை கூட அவரால் நிறைவேற்றி தரமுடியவில்லை. முக்கியமாக நமதுருக்கு புகைவண்டி கொண்டுவர SS.பழனிமாணிக்கத்தால் முடியவில்லை. அதிராம்பட்டினம் மக்கள் அனைவருடைய கோபமும் SS.பழனிமாணிக்கத்தின் மீது இருப்பதை அறிந்த திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் இவரையே தஞ்சாவூர் தொகுதியில் நிறுத்தினால், திமுகவுக்கு வெற்றி கிடைக்காது என்று அறிந்து, TR. பாலு அவர்களை தஞ்சாவூர் தொகுதியில் நிறுத்தி இருக்கிறார். TR. பாலுவின் முயற்சியால் தான் மன்னார்குடிக்கு புகைவண்டி நிலையம் வந்தது. இதை வைத்தே தஞ்சாவூர் தொகுதியில் நின்று வெற்றி பெறுவதற்கு திமுக முயற்சிகளை கையாள நினைக்கிறது. நீங்கள் பாருங்கள் திமுக சார்பில் ஒட்டு கேட்டு வரும்போது நான் உங்கள் ஊருக்கு புகைவண்டி வருவதற்கு பாராளுமன்றத்தில் திமுக சார்பில் குரலை எழுப்புவேன் என்று ஓட்டு கேட்டு வருவார்கள்.
ReplyDelete