தஞ்சையில் ஒரே தண்டவாளத்தில் ரெயில்கள் வந்ததால் பரபரப்பு !

Unknown
0

              தஞ்சை ரெயில்வே நிலையத்தில் இன்று காலை பயணிகள் ரெயில் நின்ற பிளாட் பாரத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
               சென்னையில் இருந்து தினம் தோறும் இரவு 11.10 மணிக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு காலை 7.20 மணிக்கு தஞ்சை ரெயில்வே நிலையத்திற்கு வந்து, 1–வது பிளாட்பாரத்தில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் 3–வது பிளாட் பாரத்தில் நின்று விடுவது வழக்கம்.
வழக்கம் போல் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 11.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தது. தஞ்சை ரெயில் நிலைய சிக்கனல் கட்டுபாட்டு அறையில் இருந்து 3–வது பிளாட்பாரத்திற்கு வந்து நிற்கவும் என்று ரெயில் டிரைவருக்கு தகவல் வந்தது.
               இதையடுத்து உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர் தஞ்சை ரெயில்வே நிலையத்தில் உள்ள 3–வது பிளாட்பாரத்தில் ரெயிலை இயக்கி வந்தார்.
அப்போது 3–வது பிளாட்பரத்தில் உழவன் எக்ஸ்பிரஸ ரெயில் நிற்கும் படி தெரிவிப்பதற்கு பதிலாக 4–வது பிளாட் பாரத்தில் நிற்கும் என்று சிக்னல் காண்பிக்கப்பட்டது.
              இதனால் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர் 4–வது பிளாட்பாரத்தில் ரெயிலை இயக்கி வந்தார். அப்போது, ஏற்கனவே 4–வது பிளாட்பாரத்தில் திருச்சியில் இருந்து தஞ்சை, திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும் பயணிகள் ரெயில் நின்று கொண்டு இருப்பது டிரைவருக்கு தெரிய வந்தது.
உடனே அவர் சிக்கனல் விழுந்த இடத்தில் இருந்து 30அடி தூரத்திலேயே ரெயிலை நிறுத்தி விட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் ரெயில் நின்ற பிளாட்பாரத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் டிரைவர் சுதாரித்துக் கொண்டு ரெயிலை உடனே நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். இல்லை என்றால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

இது குறித்து திருச்சி ரெயில்வே கோட்ட பி.ஆர்.ஓ. கோபிநாத்திடம் கேட்டபோது,
சிக்கனல் தவறுதலாக விழுந்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டது. உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர் சுதாரித்துக் கொண்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. தவறுதலாக விழுந்த சிக்கனலை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

- மாலைமலர் 


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)