இரத்த தானத்தில் சாதனை நிகழ்த்திய அஜ்மீர் ஸ்டோர் சாகுல் ஹமீது !

2

அதிரை நடுத்தெருவைச் சேர்ந்தவர் அஜ்மீர்
ஸ்டோர் A. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான
இவர் 'மணிச்சுடர்' இதழின்
அதிரை நிருபராகவும், 'அதிரை நியூஸ்'
வலைதளத்தின்
முதன்மை பங்களிப்பாளராகவும்
செயல்பட்டு வருகிறார்.
இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக
தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில்
இன்று 25 வது தடவையாக
இரத்தத்தை வழங்கி சாதனை புரிந்துள்ளார்.
இவர் இதுவரையில் 8 லிட்டர் 750
மில்லி கிராம் இரத்தம்
வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரின்
குருதிகொடையை பாராட்டி தஞ்சை மாவட்ட
ஆட்சியராக இருந்த பாஸ்கரன் அவர்கள்,
தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற
தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில்
சான்றிதல் வழங்கி பாராட்டியது, மத்திய
இணை அமைச்சர் E. அஹமது MP, பாராளுமன்ற
உறுப்பினர் அப்துல் ரஹ்மான் MP,
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R.
ரெங்கராஜன் MLA ஆகியோரிடம்
பாராட்டுதலை பெற்றிருப்பது
குறிப்பிடதக்கது. மேலும் அதிரை லயன்ஸ்
சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர்
உள்ளிட்ட
பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
பிறருக்கு முன் மாதிரியாக மேலும்
இரத்ததானங்கள் பல
செய்து சமூகத்தொண்டை தொடர்ந்து
செய்திடவேண்டும் என்ற வேண்டுகோளுடன்
'அதிரை நியூஸ்' சார்பில் A. சாகுல்
ஹமீது அவர்களுக்கு வாழ்த்துகளை அன்புடன்
தெரிவித்துக்கொள்வதில்
மகிழ்ச்சி அடைகின்றோம்.
மேலும் இரத்ததானம் செய்த
அதிரை பேரூராட்சியின் 12
வது வார்டு உறுப்பினர் நூர்லாட்ஜ்
செய்யது அவர்களுக்கும்
வாழ்த்துகளை அன்புடன்
தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்: அதிரை நியுஸ்

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நபருக்கு இரத்தம் தேவைபட்டால் உடனடியாக இரத்ததானம் செய்விர்களாக. இரத்ததானம் செய்வதால் நமது உடலில் உள்ள பழைய இரத்தம் வெளியேற்றப்பட்டு, புதிய இரத்தம் நமது உடலில் ஊறும். இரத்ததானம் செய்வதால் வாந்தி, மயக்கம், உடல்நல கோளாறு ஆகியவை எற்படும் என்ற தவறான எண்ணம் நமது சமுதாய மக்களிடத்தில் உள்ளதால், இரத்தம் கொடுக்க முன் வரும் நபர்களை கூட இரத்ததானம் செய்யவிடாமல் தடுத்துவிடுகிறார்கள்.
    இரத்ததானம் செய்வதில் A. சாகுல் ஹமீது அவர்கள் ஒரு புரட்சியே ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார். இது வரை 25 தடவை இரத்ததானம் செய்துள்ள அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், தெரிவித்துகொள்கிறேன். அவரது சமுதாய பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.
    மேலும் இவரை போன்று மற்றவர்களும் சமூகப்பணியில் ஈடுபட எல்லாம் வல்ல இறைவன் நம் யாவருக்கும் உதவி புரிவானாக.

    ReplyDelete
Post a Comment