ஏப்ரல்முதல் கேலக்ஸி S5 விற்பனை!!

Pudhiyavan
0
மார்ச் 28 – சாம்சங் நிறுவனம், வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தன் புதிய தாயாரிப்பான கேலக்ஸி S5 (Galaxy S 5) திறன்பேசிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11, தேதி சந்தைப்படுத்த இருக்கின்றது.கடந்த மாதம் பார்சிலோனவில் நடைபெற்ற அனைத்துலக செல்பேசி மாநாட்டில் (Mobile World Congress) முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘கேலக்ஸி S5′ (Galaxy S 5) திறன்பேசிகளானது பல்வேறு நவீன சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:-“சாம்சங் கேலக்ஸி S5 திறன்பேசிகளானது, மற்ற திறன்பேசிகளுடன் ஒப்பிடுகையில் திருட்டைத் தடுக்கும் கைரேகை ஸ்கேனர், நீர்புகாத் தன்மை, இதயத் துடிப்பை அளக்கும் சென்சார் என மூன்று முக்கிய காரணிகளை பிரதானமாகக் கொண்டுள்ளது”“இதுமட்டுமில்லாமல் கேலக்ஸி நோட் 3-ல் உள்ளது போன்ற ஃபாக்ஸ் தோல் வடிவமைப்பு, 5.1 அங்குல அளவு, 1080 x 1920 பிக்சல் தீர்மானம் (Pixel Resolution) உடைய AMOLED தொடுதிரை, 2ஜிபி முதன்மை நினைவகம், 4.4.2 ஆண்டிராய்டு இயங்குதளம் மற்றும் Quad Core Snapdragon 2.5GHz செயலி (processor) ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது” எனத் அறிவித்துள்ளது.கேலக்ஸி S5 யுடன் Gear 2, Fit என்ற இரு திறன் கைக்கடிகாரங்கள் முறையே RM899 மற்றும் RM599 என்ற விலையில் அறிமுகமாக இருக்கின்றன. இந்த திறன் கைக்கடிகாரங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் இதயத்துடிப்பின் அளவினை சரிபார்த்துக்கொள்வது, தங்களுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ளவது போன்றவற்றை செய்ய இயலும் என்பது கூடுதல் தகவலாகும் .

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)