அதிரைக்கு வருகை புரிந்த தஞ்சை தி.மு.க வேட்பாளர் T.R. பாலு (புகைப்படங்கள்)

Pudhiyavan
2


வருகின்ற நாடாளமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிடும் வேட்பாளராக T.R. பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நமதூர் தி.மு.க வினர் சேர்மன் அஸ்லம் அவர்களின் தலைமையில் T.R. பாலு அவர்களின் இல்லத்திற்க்கு சென்று சந்தித்தனர். 

இதனை அடுத்து திரு.T.R. பாலு அவர்கள் இன்று  மாலை 4:00 நமதூருக்கு வருகை தந்தார்கள். முதலில் அதிரை தி.மு.க அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் கூட்டனி கட்சியான ம.ம.க அலுவகத்துக்கு சென்று வாக்குகள் சேகரித்தார்.

பின்பு மற்றும் ஒரு கூட்டனி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவகத்துக்கும் சென்று வாக்குகள் சேகரித்தார்.

கடைசியாக அதிரை நடுத்தெருவில் உள்ள ஆய்ஷா மகளிர் அரங்கத்துக்கு சென்ற அவர் அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

இதில் அதிரையை சேர்ந்த தே.மு.தி.க வினர் 15 பேர் T.R. பாலு முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தனர்.













விரைவில் இவர் ம.ம.க அலுவலகத்திலும் ஆய்ஷா மகிளிர் அரங்கத்திலும் பேசிய காணொளி விரைவில் பதியப்படும்.

இணைந்திருங்கள் அதிரை பிறையில்..

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.

    இந்தத் தொகுதி மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் அது யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
    அதிராம்பட்டினம்-614701.

    ReplyDelete
  2. உறுதியாக, உண்மையாக, செயல்படப்போகும் வேட்பாளர் யார்? அது தான் இங்கு பிரச்சனை. நான் அதை செய்வேன், இதை செய்வேன், உங்கள் ஊருக்கு புகைவண்டி கொண்டு வர முயற்சிப்பேன், உங்கள் ஊரு முன்னேற்றதிற்கு பாடுபடுவேன். என்று அணைத்து கட்சி வேட்பாளர்களும் தேர்தல் நேரத்தில் கூறுவது சகஜம் தான்.
    இந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகளை மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் யார்? அதிலே தான் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
    அதிராம்பட்டினம் மக்களின் கோரிக்கைகளை மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படும் வேட்பாளர்கே வாக்களியுங்கள்.
    மக்களே! சிந்தித்து வாக்களிப்பீர்!

    ReplyDelete
Post a Comment