
வருகின்ற நாடாளமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிடும் வேட்பாளராக T.R. பாலு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நமதூர் தி.மு.க வினர் சேர்மன் அஸ்லம் அவர்களின் தலைமையில் T.R. பாலு அவர்களின் இல்லத்திற்க்கு சென்று சந்தித்தனர்.
இதனை அடுத்து திரு.T.R. பாலு அவர்கள் இன்று மாலை 4:00 நமதூருக்கு வருகை தந்தார்கள். முதலில் அதிரை தி.மு.க அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் கூட்டனி கட்சியான ம.ம.க அலுவகத்துக்கு சென்று வாக்குகள் சேகரித்தார்.
பின்பு மற்றும் ஒரு கூட்டனி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவகத்துக்கும் சென்று வாக்குகள் சேகரித்தார்.
கடைசியாக அதிரை நடுத்தெருவில் உள்ள ஆய்ஷா மகளிர் அரங்கத்துக்கு சென்ற அவர் அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
இதில் அதிரையை சேர்ந்த தே.மு.தி.க வினர் 15 பேர் T.R. பாலு முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தனர்.










பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்தத் தொகுதி மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் அது யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
அதிராம்பட்டினம்-614701.
உறுதியாக, உண்மையாக, செயல்படப்போகும் வேட்பாளர் யார்? அது தான் இங்கு பிரச்சனை. நான் அதை செய்வேன், இதை செய்வேன், உங்கள் ஊருக்கு புகைவண்டி கொண்டு வர முயற்சிப்பேன், உங்கள் ஊரு முன்னேற்றதிற்கு பாடுபடுவேன். என்று அணைத்து கட்சி வேட்பாளர்களும் தேர்தல் நேரத்தில் கூறுவது சகஜம் தான்.
ReplyDeleteஇந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகளை மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படப்போகும் வேட்பாளர் யார்? அதிலே தான் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
அதிராம்பட்டினம் மக்களின் கோரிக்கைகளை மதித்து உண்மையாக, உறுதியாக செயல்படும் வேட்பாளர்கே வாக்களியுங்கள்.
மக்களே! சிந்தித்து வாக்களிப்பீர்!