
அதிரையில் இன்று அதிகாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை கருமேகங்கள் சூழ ஜில்லென்ற காற்றுடன் லேசான தூரல் மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் அதிரை முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.
தற்பொழுது 9 மணியாகியும் வானம் மேகமுட்டத்துடன் காணப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மழை தண்ணீர் இல்லாமல் வெப்பத்தில் தவித்த நமதூர் மக்கள் இந்த மழை இன்னும் தொடர வேண்டும் என எதிர்பார்த்தவாறு உள்ளனர்.

எனக்கு தெரிஞ்சு 5 நிமிஷம் மழைச்சாரல் தான் தூருனுச்சுன்னு சொல்றாங்க..? ஒரு மணி நேரமா மழை பெய்தது..???
ReplyDeleteசகோதரர் காலித் அவர்களுக்கு, இங்கு பதியப்படும் செய்திகள் பலரிடம் விசாரித்தே பதியப்படுகின்றன. சுமார் 1 மணி நெரம் பெய்தது என்று தான் பதிந்துள்ளோம். இந்த தூரல் மழை பெய்ததை நான் தான் பார்த்தேன்..
ReplyDeleteதவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டும் உங்கள் கருத்தை வரவேற்கிறோம். மேலும் கருத்துக்கல் பதிய வாழ்த்துகிறோம்.