தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் துறைமுக பகுதிகளிலிருந்து சில மீனவர்கள் கடலில் பாசிகளை பறிப்பதற்காக கடலுக்கு செல்கின்றனர். உவர் நீரில் பலவகை தாவர கூட்டங்கள் கடலுக்கு அடியில் உள்ளன. கரும்பு பாசி, பூ பாசி, கரும்பாசி, பூவந்தி பாசி, மரிக்கொழுந்து பாசி, வேர் பாசி, தாலை பாசி, பார் பாசி, கஞ்சி பாசி என பல வகையான பாசிகளும் கடலுக்கு அடியில் உள்ளன.
இதில் தஞ்சை மாவட் டம் அதிராம்பட்டினம் கடலில் இருந்து புதுக் கோட்டை மாவட்டம் கடல் பகுதி வரை அதிகளவில் கஞ்சி பாசிகள் உள்ளன. இந்த வகை பாசி உணவுப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மறவக்காடு, அதிராம்பட்டி னம், சின்னமனை போன்ற துறைமுகங்களிலிருந்து சில மீனவர்கள் 10க்கும் மேற்பட்ட படகில் கஞ்சி பாசி பறிப்பதற்கு கடலுக்கு செல்கின்றனர். மீனவர்கள் கண்ணாடி அணிந்து கடலுக்குள் மூழ்கி கஞ்சி பாசியை பறிக்கின்றனர். மீனவர்கள் பறித்து வருகிற கஞ்சி பாசிகளை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து மீனவர் செல்லையா கூறுகையில், மீன்வரத்து குறைவான நேரத்தில் கஞ்சி பாசி பறிப்பதற்கு கடலுக்கு செல் வோம். கடலில் 2 பாகத்தில் 20 அடி ஆழத்தில் கஞ்சி பாசி கள் இருக்கும். கண்ணாடி அணிந்து கடலுக்குள் சென்று கஞ்சி பாசிகளை பறித்து வருகிறோம். ஒரு கிலோ பாசி ரூ.3க்கு விற்பனை செய்கிறோம். வியாபாரிகள் இந்த பாசியை, மதுரைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஒரு தடவை பாசி பறிக்க சென்றால் 1 டன் எடை வரைக்கும் பாசி களை படகில் ஏற்றி வருகி றோம். அதற்குமேல் பட கில் ஏற்ற முடியாது. ஒரு படகுக்கு 3 பேர் செல்வோம். எல்லா நேரத்திலும் இந்த பாசி அகப்படாது. மே மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை அதிகளவில் காணப்படும். மழை காலங்களில் இவ்வகை பாசி அகப்படாது. அலைகள் குறைந்த கடல் பகுதிகளில் மட்டும் தான் கஞ்சி பாசி அகப்படும்.
அதிராம்பட்டினத்திலிருந்து கட்டுமாவடி வரை கஞ்சி பாசிகள் அதிகம் காணப்படுகிறது. கஞ்சி பாசியை அல்வா பாசி என்றும் கூறுவார்கள் என்றார்.
நன்றி: தினகரன்

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது