இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பை குறிக்கும்.
1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இத்தகைய இணையத்திற்கு வயது 25. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார்ந்த கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாக உள்ளன.
மின்னஞ்சல், இணைய உரையாடல்,.காணொளி பார்த்தல், விளையாட்டு, மற்றும் தொடர்புபடுத்தப்பட்ட இணையத்தளங்கள். முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருகின்றன.
1950-ம் ஆண்டுகளில் தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயனர்கள், பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர். இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள், வரிசைப்படுத்துதல் முறைகள், மற்றும் தரவுப்பொதி நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினர்.
ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) இணைய தந்தையாக அறியப்படுகிறார். அந்த சமயத்தில் உருசியாவில் உள்ள சேர்னோபில் அணுஆலை வெடிப்பு, விஞ்ஞானிகள் ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது.
இது மட்டுமல்லாமல், உலகத்தையே ஒரு கணினி பெட்டிக்குள் அடக்கி ஆள்கிறது. அப்படி ஒரு காலத்தில் இணையத்தில் பிரபலமாக இருந்து, தற்போது காணாமல்போன சில விஷயங்களைப் பார்ப்போம்.
சாட் ரூம்ஸ் (Chat rooms) ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் வாட்ஸ் ஆப்-பில் (WhatsApp) சாட்டிங் செய்யாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதற்கான அடிக்கல் 90-களில் ‘சாட் ரூம்ஸ்’ என்ற வலைதளத்தால் போடப்பட்டது.
ஆன்லைனில் தமது பாதுகாப்பு பற்றி கவலைப்படாத காலத்தில், நண்பர்களுடன் குரூப் சாட் செய்வது இனிமையான அனுபவம்.
வெர்ச்சுவல் வாழ்த்து அட்டைகள் (Virtual Greeting Cards) பின்னணி இசையுடனும், அனிமேஷன் பொம்மைகளுடன் இணையத்தில் வெர்ச்சுவல் வாழ்த்து அட்டைகள் வலம் வர, ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு தினம் என்று கூறி நமக்கு அன்பானவர்களுக்கு அனுப்பும் காலம் மலையேறி போய்விட்டது.
சங்கிலி இ-மெயில்கள் (Chain mails) “இதனைப் பத்து பேருக்கு அனுப்பினால் உங்களின் முக்கியமான எண்ணம் ஒன்று நிறைவேறும்” என்று பார்த்தவுடன் நாம் எல்லாரும் ஒருதடவையாவது ஃபார்வர்டு செய்திருப்போம். இன்றும் இதுபோன்ற நம்பிக்கைகளைச் சமூக வலைதளங்களில் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.
இதுபோன்ற பல விஷயஙகள் இணையதள உலகில் தோன்றி மறைந்திருக்கிறது. தற்போது இணையதளம் என்றால் அனைத்தும் கூகுள், ஃபேஸ்புக் என்றாகிவிட்டது.
இணையதள ஜாம்பவான்களாக உள்ள இவ்விரு நிறுவனங்களும் மக்களை ஆட்டி படைத்துக்கொண்டிருகின்றன.
இனையதளத்தில் எண்ணிலடங்கா நல்ல காரியங்கள் இருந்தாலும் தீயவைகளும் இருக்கவே செய்கின்றன.
எந்த ஒரு விசயத்தையும் அளவாக உபயோகித்தால் அனைவருக்கும் நல்லது.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது