அதிரை பிறை இணையதளம் துவங்கி 2 ஆண்டுகள் நிறைவுபெற்று இன்றுடன் 3ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.
அதிரையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக உடனுக்குடன் எந்தவித பாரபட்சமும் இன்றி அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் அளித்துக். உண்மை தண்மை மாறாமல் கொண்டிருக்கிறோம்.
துடிப்பான இளைஞர்களை செய்தியாளர்களாக கொண்டு இந்த இணையதளம் நடத்தப்படுகிறது.
2 வருடங்களில் மொத்தம் 1646 செய்திகளை பதிந்துள்ளோம். வெறும் செய்திகளை மட்டும் தராமல் உள்ளூர் நிகழ்வுகள், மாவட்ட, மாநில, தேசிய, உலக அளவிலான நிகழ்வுகள், மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி அறிவுரைகள், பொதுமக்களுக்கு தேவையான அரசு சார்ந்த அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள், அதிரை புகார்கள், அயல் நாட்டில் வாழும் அதிரையர்களின் நிகழ்வுகள், மருத்துவ குறிப்புகள், விளையாட்டு செய்திகள் போன்ற பல்சுவை தகவல்களை உடனுக்குடன் தந்து சென்ற ஆண்டுகளை விட இந்த வருடம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் இந்த தளம் பெற்றுள்ளது.
நாம் பதியும் புகார் சம்பந்தமான செய்திகளை வெறும் செய்திகளாக படியால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் அன்புடன் கோரிக்கையாக அளித்து ஒரு சில பகுதிகளில் அந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
PIRAI TUBE, DR. PIRAI, ஜமாலும் கமாலும் போன்ற வித்தியாசமான தலைப்புகளின் கீழ் காணொளிகளையும் மருத்துவக் குறிப்புகளையும், ஊரில் தற்சமயம் நடைபெறும் நிகழ்வுகளை உரையாடல்களாகவும் பதிந்து வருகிறோம்.
அதிரை அளவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த உண்மையான வலுவான ஒரு ஊடகத்தை அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இது போன்று எந்தவொரு லாப நோக்கமும் இன்றி அதிரை மக்களுக்கு இந்த அதிரை பிறை என்னும் ஊடகம் மூலம் சேவையாற்றி வருகிறோம்.
நாங்கள் பதியும் அனைத்து செய்திகளையும் படித்து தவற்றை சுட்டிக்காட்டியும் நல்லதாக இருந்தால் ஆதரித்தும் வரும் அதிரை பிறை நேயர்களுக்கும் தங்கள் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளையும் புகார்களையும் எங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் அதிரை வாசகர்களுக்கும், அதிரை முகநூல் நண்பர்களுக்கும் அதிரையில் உள்ள அனைத்து முஹல்லா சங்கங்களுக்கும் அதிரையில் இயங்கிக் கொண்டிருக்கும் அணைத்து இயக்கங்களுக்கும் அனைத்து தருனங்களிலும் எங்களுக்கு அறிவுரைகளையும் ஒத்துழைப்பையும் தந்து வரும் நல்ல நெஞ்சங்களுக்கும் அதிரை பிறை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதிரை பிறைக்கு செய்திகள் தர மேலே படத்தில் உள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.


உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் . உங்களின் புதிய முயற்சி மிகவும் நேர்த்தியான செயல்பாடு தொடர வேண்டும் . அதே சமயம் படிப்பிலும் கவனம் செலுத்துங்கள் . ..
ReplyDeleteBy Mohammed
வாழ்த்துக்கள் .
ReplyDeleteஇளமை பருவத்தை சமுதாயதிற்க்கு உதவும் நோக்கில் செயல்படுகின்றிர்கள்.
ReplyDeleteவெற்றி பயனம் தொடர வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் ..
ReplyDeleteசெய்தி தரம் உயர்ந்துள்ளது . மேலும் தொடர்ந்து செயல்படுங்கள் .
ReplyDeleteஇவ்வூடகமான அதிரை பிறை யில் நானும் ஒரு பதிவாளராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் வெற்றியுடன் தொடர வாழ்த்துக்கள் ..
இப்படிக்கு,
இர்ஷாத் பின் ஜஹபர் அலி
(அதிரை பிறை)
இவ்வூடகமான அதிரை பிறை யில் நானும் ஒரு பதிவாளராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் வெற்றியுடன் தொடர வாழ்த்துக்கள் .
ReplyDelete