அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

1


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த வருடமும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் அந்தந்த பள்ளிகளுக்கு வந்துள்ளன.

அதிரையை பொருத்தவரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி மற்றும்  காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் இதில் பயனடைகின்றனர்.

நமதூர் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தேவையான சைக்கில்கள் உதிரி பாகங்களாக  கொண்டுவரப்பட்டு பள்ளியில்  கோர்க்கப்பட்டது.

இந்த சைக்கிள்களை இன்று அப்பள்ளி மாணவிகளுக்கு  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் காதிர் முகைதீன் பள்ளி முன்னால் ஆசிரியர் ஜனாப்.ஹாஜா முகைதீன் அவர்கள்,அதிரை பேரூராட்சி துணை தலைவர் திரு.பிச்சை, 2வது வார்டு கவுன்சிலர் உதயகுமார், 15வது வா ர்டு கவுன்சிலர் ஜனாப்.அப்துல் லத்தீப் ஆகியோர் கலந்துக்கொண்டு சைக்கிள்களை வழங்கினார்கள்.







செய்தி மற்றும் படங்கள்:நஜீர்

Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இலவச மடிக்கணினி இப்பள்ளியில் மாணவிகளுக்கு இந்த வருடம் வரைகொடுக்கபடவில்லை. அதுபற்றி விசாரித்து தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
Post a Comment