அதிராம்பட்டினத்திலிருந்து கூறல் கத்தாழை மீன் நெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி !

0

   உயர்வகை மருந்து தயாரிப்பதற்காக அதிராம்பட்டினத்திலிருந்து கூறல் கத்தாழை மீன் நெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிராம்பட்டினத்திலிருந்து கட்டுமாவடி  வரை  37  மீன்பிடி   துறைமுகங்கள்  உள்ளன.
நாட்டு படகுகள்,  பைபர் போட்டுகள், விசை படகுகள் போன்ற படகுகள் கடலில் மீன் பிடிக்கும் போது பல வகையான மீன்கள் அகப்படும். அதில் கூறல் கத்தாழை மீன்களும் அகப்படும். அனைத்து மீன்களின் வயிற்றிலும் நெட்டி உள்ளது.
ஆனால் ,கூறல் கத்தாழை மீனின் நெட்டி மலட்டு தன்மை நீக்குவதற்கான மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறதுஇதனால்   முகவர்கள் மூலம் மீன் வியாபாரிகளிடம் வாங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மீனவர்கள் வலையில்  பெரியவகை  கூறல்  மீன் அகப்பட்டால் அன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.
இது குறித்து மீனவர் காளிதாஸ் கூறுகையில்: மீனவர்கள் வலையில் பலவகையான மீன்கள் அகப்படும்.  ஆனால்  பெரியவகை கூறல் மீனில் உயர் ரக நெட்டி இருப்பதால் அந்த கூறல் மீனுக்கு அதிக வரவேற்பு உள்ளது. கூறல் கத்தாலை மீன் 15 கிலோ எடையிலிருந்து 25 கிலோ எடை கொண்ட மீன் மீனவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் கொடுத்து வியாபாரிகள் வாங்குகின்றனர்.
அதோடு ஆண் கூறல் கத்தாழை மீன்களை விலை அதிகமாகவும், பெண் கூறல் கத்தாழை மீன்களை  விலை  குறைவாகவும் வாங்குகின்றனர். ஆண் கூறல் கத்தாழை மீனில் நெட்டி அடர்த்தியாகவும், பெண் கத்தாழை மீனில் நெட்டி அடர்த்தி குறைந்து காணப்படுவதால் பெண் மீனின் விலை குறைந்து விலை போகிறது.
ஆண்  கூறல் கத்தாழை நெட்டி 1 கிலோ ரூ.2 லட்சத்துக்கும், பெண் கூறல் கத்தாழை மீன் நெட்டி ரூ.1 லட்சத்துக்கும்  வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஒரு மீனுக்கு ஒரு நெட்டி தான் இருக்கும். கூறல் கத்தாழை மீன் நெட்டியில் உயர்வகை மருந்து தயார் செய்யப்படுவதால் சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
மேலும் நெட்டி பயன்படுத்தி உயர்வகை சூப்பு தயார் செய்யவும் வெளிநாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு  அனுப்பப்படுகிறது. கூறல் கத்தாழை நெட்டிக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.
-dinakaran
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)