பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரசு விடுமுறையாக 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசின் தலைமை காஜி ‘‘துல்ஹஜ் மாத பிறை கடந்த 25–ந்தேதி தெரியவில்லை. இதனால் பக்ரீத் பண்டிகை 5–ந்தேதிக்கு பதிலாக 6–ந்தேதி கொண்டாடப்படும்’’ என்று அறிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசு பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறை தேதியை மாற்றி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ள உத்தரவில், பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறை 5–ந்தேதிக்கு பதிலாக 6–ந்தேதி (திங்கட்கிழமை) மாற்றி விடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மேலும் ஒருநாள் கூடுதலாக விடுமுறை கிடைத்துள்ளது. தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.
நாளை (வியாழக்கிழமை) ஆயுதபூஜை, 3–ந்தேதி (வெள்ளிக்கிழமை) விஜயதசமி பண்டிக்கான விடுமுறையாகும். தொடர்ந்து 4 மற்றும் 5–ந்தேதி சனி ஞாயிறு வழக்கமான விடுமுறையாகும். தற்போது 6–ந்தேதி (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது