FLASH NEWS: விசாரணைக்கு அழைத்து வந்தவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற எஸ்.ஐ ! எஸ்.பி. பட்டினத்தில் பயங்கரம் !

2


ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் சையத் முகமது இவருக்கும், அந்த ஊரைச் சேர்ந்த இன்னொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது


இதனையடுத்து போலீசார் இன்று மாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது ஏற்பட்ட களேபரத்தில் சையத் முகமது சுட்டுக் கொல்லப்பட்டார். 

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த சையத் முகமது, சப்-இன்ஸ்பெக்டர் காளிதாசை கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக சையத்தை துப்பாக்கியால் சுட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் விளக்கம் அளித்துள்ளார். 

காவல் நிலையத்தில் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அஸ்ஸலாமு அழைக்கும் முதலில் அனைத்து காவல் நிலையங்களிலும் நவீன காலங்களுக்கு ஏற்ப கண்கானிப்பு கேமராக்கள் வைக்கவேண்டும் ....ஏனென்றால் இங்கு யாரு மீது தவறு என்று தெரியவில்லை.கண்கானிப்பு கேமராக்கள்.வைத்து இருந்தால் இங்கு யாரு மீது தவறு என்று துள்ளியமாக தெரிய வரும் .....

    ReplyDelete
  2. இனி வரும் காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடக்காதவாறு குற்றத்தில் ஈடுபடும் அதிகாரிகளை கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.பொது மக்களுக்கு எதிராக துப்பாக்கியை பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும் .

    தனி ஒரு நபரை விசாரணைக்கு அழைத்து 60கிலூமீட்டர் தூரம் கூட்டிசெல்லும் போது கத்தியால் குத்த முயற்சி செய்யாதவர் காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்த முயற்சிசெய்தார் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் ..அவ்வாறு எஸ் .பி.காளிதாஸ் அவர்கள் கூரியது போல் அவர் கத்தியால் குத்த வந்தார் என்றால் அந்த காவல் நிலையங்களில் எந்த ஒரு காவல் அதிகாரிகளும் அந்த காவல் நிலையத்தில் இல்லையா ?அவ்வாறு சையத் முகம்மது கத்தியால் எஸ் .பி.காளிதாசை கத்தியால் குத்த வரும் போது மற்ற காவலர்கள் தடுத்து அவரிடம் கத்தியை பிடிங்கிருக்கலாமே ...அவ்வறு மற்ற காவலர்கள் செய்யாதது ஏன் ?இவ்வாறு பல கேள்விகள் பொது மக்களிடையே எழுகின்றது .

    ReplyDelete
Post a Comment