ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் சையத் முகமது இவருக்கும், அந்த ஊரைச் சேர்ந்த இன்னொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது
இதனையடுத்து போலீசார் இன்று மாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது ஏற்பட்ட களேபரத்தில் சையத் முகமது சுட்டுக் கொல்லப்பட்டார்.
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த சையத் முகமது, சப்-இன்ஸ்பெக்டர் காளிதாசை கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக சையத்தை துப்பாக்கியால் சுட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
காவல் நிலையத்தில் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement




அஸ்ஸலாமு அழைக்கும் முதலில் அனைத்து காவல் நிலையங்களிலும் நவீன காலங்களுக்கு ஏற்ப கண்கானிப்பு கேமராக்கள் வைக்கவேண்டும் ....ஏனென்றால் இங்கு யாரு மீது தவறு என்று தெரியவில்லை.கண்கானிப்பு கேமராக்கள்.வைத்து இருந்தால் இங்கு யாரு மீது தவறு என்று துள்ளியமாக தெரிய வரும் .....
ReplyDeleteஇனி வரும் காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடக்காதவாறு குற்றத்தில் ஈடுபடும் அதிகாரிகளை கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.பொது மக்களுக்கு எதிராக துப்பாக்கியை பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும் .
ReplyDeleteதனி ஒரு நபரை விசாரணைக்கு அழைத்து 60கிலூமீட்டர் தூரம் கூட்டிசெல்லும் போது கத்தியால் குத்த முயற்சி செய்யாதவர் காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்த முயற்சிசெய்தார் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் ..அவ்வாறு எஸ் .பி.காளிதாஸ் அவர்கள் கூரியது போல் அவர் கத்தியால் குத்த வந்தார் என்றால் அந்த காவல் நிலையங்களில் எந்த ஒரு காவல் அதிகாரிகளும் அந்த காவல் நிலையத்தில் இல்லையா ?அவ்வாறு சையத் முகம்மது கத்தியால் எஸ் .பி.காளிதாசை கத்தியால் குத்த வரும் போது மற்ற காவலர்கள் தடுத்து அவரிடம் கத்தியை பிடிங்கிருக்கலாமே ...அவ்வறு மற்ற காவலர்கள் செய்யாதது ஏன் ?இவ்வாறு பல கேள்விகள் பொது மக்களிடையே எழுகின்றது .