இஸ்லாமியர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டது - மாலை மலர்

1

நேற்று (02.10.2014) மாலை மலர் இணையதளத்தில் வெளிவந்த செய்தி முஸ்லிம்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. இச்செய்தியால் பல தரப்பிலிருந்து எதிப்புகள் கிளம்பியது. இதனால் பணிந்து மன்னிப்பு கேட்டது மாலைமலர். 

நேற்று மாலை மலர் வெளியிட்ட செய்திக்கு நம் அதிரை பிறை மற்றும் சகோதர இணையதளமான அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்திலும் எதிர்ப்பு செய்தியை வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. 



.........................................................................................................................................................

மாலை மலர் வெளியிட்ட மன்னிப்பு  செய்தி!!!


அன்பான இஸ்லாமிய நண்பர்களுக்கு

இன்று காலை (02.10.2014) நமது மாலைமலர் இணையதளத்தில் இஸ்லாமியர்களின் புனித தலமான புனித மெக்கா நகரம் மெருகூட்டியது தொடர்பான செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படை நோக்கம் புனித மெக்கா நகரமானது சவுதி அரேபிய அரசால் மிக அழகாக மெருகூட்டப்படுகிறது என்பதை குறிக்கும் விதத்திலேயே பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் ஷியா, சன்னி மதத்தின் மீது தீவிர பற்று உள்ளவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற வார்த்தை பிரசுரிக்கப்பட்டு விட்டது. இது இஸ்லாமிய நண்பர்களின் மனதை பாதித்துள்ளதாக தெரிய வருவதால் மாலைமலர் இணையதளம் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மாலைமலர் இணையதளம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஒரு போதும் எதிரானது அல்ல என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.



இப்படிக்கு
 
இணையதள ஆசிரியர்
மாலைமலர் இணையதளம். 


http://www.maalaimalar.com/2014/10/02204654/sorry.html
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இவர்கள் மன்னிப்பு கேட்டதற்கு முக்கிய காரணம் நாம் ஒன்று திறந்ததே. இஸ்லாமிர்க்கோ அல்லது இஸ்லாமியர்களுக்கோ ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டால் அவர்களுக்கு நாம் நமது ஒற்றுமையின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் . இச்சம்பவத்தை போன்று.

    ReplyDelete
Post a Comment