அதிரை கரிசல்மணி ஏரி நீர் மட்டத்தை குறைக்க மழவேனிற்காடு அன்னா நகர் குடிசை பகுதியினர் கோரிக்கை!

2
அதிரையில் தற்பொழுது பம்பிங் மூலம் கரிசல்மணி ஏறி நிறைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தொடர்ந்து பெய்த கனமழையாலும் இந்த ஏரி நிறம்பியுள்ளது. இதனால் கரிசல்மணி ஏரிக்கரையில் வசிக்கும் மழவேனிர்க்காடு அன்னா நகர் கிராமத்தை குடிசைகள் தண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த பகுதியில் மொத்தம் 48 குடிசைகள் உள்ளன. இந்த ஏறி முழுமையாக நிறம்பியுள்ள காரணத்தால் இந்த குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இவர்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது.  இது குறித்து இப்பகுதியை சேர்ந்த குமார் அவர்கள் நமது செய்தியாளரிடம் கூறியதில் "கடந்த 3 நாட்களாக எங்கள் குடிசை பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் எங்கள் அன்றாட வாழ்கை பாதிப்படைந்துள்ளது. இந்த வெள்ளத்தை பார்வையிட தாசில்தார், ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அதிகாரி ஆகியோர் வந்தனர். அவர்களிடம் நாங்கள் கரிசல்மணி ஏரி நீர்மட்டத்தை ஒரு அடி குறைக்குமாறு கேட்டுக்கொண்டோம்.

அதற்கு அவர்கள் நாங்கள் இருக்கும் பகுதி ஏரி புறம்போக்கு பகுதி எனவும் இதனை தற்போதைக்கு காலி செய்துவிட்டு வேறு பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும் கூறினர். எங்கள் வீடுகளுக்கு மின்சார இனைப்பு உள்ளது. தவறாமல் வீட்டு வரி கட்டிவருகிறோம். இந்நிலையில் பல வருடங்களாக இங்கேயே தங்கிவிட்டு திடீரென காலி செய்ய சொன்னால் நாங்கள் என்ன செய்வது என்று கூறினார்"

மழவேனிற்காடு அன்னா நகர் பகுதி மக்களின் துயர் துடைக்க அப்பகுதியில் உள்ள குடிசைகளில் புகுந்துள்ள வெள்ள நீர் வடிவதற்கு கரிசல்மணி ஏரியில் நீர்மட்டம் ஒரு அடி குறைக்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்! 



Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    தண்ணீரை கொண்டு வந்து இந்த கருசல் மணி ஏரியை நிரப்ப இப்படி பாடு ‎படும் நமதூர் பேரூர் நிர்வாகமே, இந்த ஏரியில் மக்கள் நிரம்பும்போது ‎கண்டு கொள்ளாமல் இருந்தது ஏன்?‎

    இப்போது என்ன செய்யப்போகின்றீர்கள்?
    சும்மா கையைப் பிசைந்து கொண்டு நின்றால் பருப்பு வேகாது. முடிவெடுப்பது உங்கள் கையில்.

    இந்த ஏறியும் நிரம்பனும், மக்களும் காப்பாற்றப்படனும்.
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. அவரவர் இப்படி புறம் போக்கு நிலத்தில் கொட்டகை போட்டு குடியேறிவிட்டு நாங்க கரண்டு கொடுத்துட்டோம், வரி கட்டுறோம் என்று சொன்னால் எப்படி அரசாங்க சொத்தை ஆட்டை போடுவது போல் அல்லவா ஆகும், அது ஒரு புறம் இருக்கட்டும் அன்று அவர்கள் இப்படி ஆக்கிரமிப்புப் செய்யும் பொது பேறுராட்ச்சி நிர்வாகம் ஏன் கண்டுகொள்ளவில்லை, இரண்டையும் எப்படி நியாயம் படுத்துவது.

    ReplyDelete
Post a Comment