SP பட்டினம் செய்யது முகமது குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி -CM

0

சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்டு இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கவும்,இதுகுறித்து நீதி விசாரணை நடத்தவும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்-
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம்,
எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில்
14-10-2014 அன்று எஸ்.பி.பட்டினம்
மேலத் தெருவைச் சேர்ந்த
செய்யது முகமது, பழுது நீக்கும்
கடையில் விடப்பட்டிருந்த
தனது நண்பரின் இருசக்கர
வாகனத்தை திரும்ப கேட்டபோது,
ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக
கொடுக்கப்பட்ட புகாரின்பேரில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டு,
உதவி ஆய்வாளர் காளிதாஸ்
விசாரணை மேற்கொண்டபோது,
துப்பாக்கியால் சுடப்பட்டதில்
செய்யது முகமது சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற
செய்தியை அறிந்து நான் மிகவும்
துயரம் அடைந்தேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக
உதவி ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம்
செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்
குறித்து குற்றவியல் நீதிமன்ற நடுவர்
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த
செய்யது முகமதுவின்
குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின்
பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5
லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)