
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கின. நவம்பர் 10-ஆம் தேதி இந்தப் பணிகள் நிறைவடைகின்றன.
இந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் நாளை நவம்பர் -2 தேதி வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிரையில் அந்தந்த பகுதிகளின் வாக்கு சாவடிகளில் நடைபெற இருக்கிறது.
Advertisement


பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நமதூரில் ஓரளவுக்கு சல்லடை போட்டு அலசி ஆராய்ந்து பார்த்ததில், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், மின் வாரிய இணைப்பு நுகர்வோர் பெயர், வீட்டு உரிமை பத்திரம், பட்ட, வங்கி பாஸ் புக், ஆதார் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்று, பிறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, கேஸ் இணைப்பு, இன்னும் அனேக வற்றில் பெயர்களும் முகவரிகளும் எத்தல்ன் குத்தலாக இருக்கின்றது. இவைகளை எப்போது சரிசெய்து கொள்வது?
சரியாக விவரங்களை கொடுக்க தெரியவில்லை.
சரியான விவரத்தை கொடுத்தாலும், தெளிவாக எழுதத் தெரியவில்லை.
தெளிவாக எழுதினாலும், பதிவில் முறையாக ஏற்ற தெரியவில்லை. கிடையாது.
பதிவில் முறையாக ஏற்றினாலும், அட்டை ஆறுமாத காலத்திற்கு தாங்க மாட்டுது.
அட்டை ஆறுமாத காலம் தாங்கினாலும், ஒழுங்காக பராமரிக்க தெரியவில்லை.
இப்படி குறை சொல்லிக்கொண்டே போனால்.............!!!!!?????
இனியாவது ஒழுங்காக இருக்குமா?
தூங்கினது போதும் விழித்துக் கொள்ளுங்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com