அதிரையில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் மீண்டும் நாளை நடக்கிறது !

1

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கின. நவம்பர் 10-ஆம் தேதி இந்தப் பணிகள் நிறைவடைகின்றன.

இந்த நிலையில், 2015, ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்  அதிரையிலும்  கடந்த அக்-26 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

இந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் நாளை நவம்பர் -2  தேதி  வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிரையில் அந்தந்த பகுதிகளின் வாக்கு சாவடிகளில் நடைபெற இருக்கிறது. 


Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    நமதூரில் ஓரளவுக்கு சல்லடை போட்டு அலசி ஆராய்ந்து பார்த்ததில், ‎வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், மின் வாரிய ‎இணைப்பு நுகர்வோர் பெயர், வீட்டு உரிமை பத்திரம், பட்ட, வங்கி பாஸ் ‎புக், ஆதார் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்று, பிறப்பு சான்று, ‎குடிநீர் இணைப்பு, கேஸ் இணைப்பு, இன்னும் அனேக வற்றில் பெயர்களும் ‎முகவரிகளும் எத்தல்ன் குத்தலாக இருக்கின்றது. இவைகளை எப்போது ‎சரிசெய்து கொள்வது?‎

    சரியாக விவரங்களை கொடுக்க தெரியவில்லை.‎

    சரியான விவரத்தை கொடுத்தாலும், தெளிவாக எழுதத் தெரியவில்லை.‎

    தெளிவாக எழுதினாலும், பதிவில் முறையாக ஏற்ற தெரியவில்லை. ‎கிடையாது.‎

    பதிவில் முறையாக ஏற்றினாலும், அட்டை ஆறுமாத காலத்திற்கு தாங்க ‎மாட்டுது.‎

    அட்டை ஆறுமாத காலம் தாங்கினாலும், ஒழுங்காக பராமரிக்க ‎தெரியவில்லை.‎

    இப்படி குறை சொல்லிக்கொண்டே போனால்.............!!!!!?????‎

    இனியாவது ஒழுங்காக இருக்குமா?‎

    தூங்கினது போதும் விழித்துக் கொள்ளுங்கள். ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
Post a Comment