Dr.Pirai-காய்ச்சலுக்கு ஊசி போடாதீங்க! அது மருந்து கிடையாது விஷம்!

0
காய்ச்சல் சீக்கிரம் சரியாக ஊசி போட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து தமிழக பொது சுகாகாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறுகையில்,
காய்ச்சல் சீக்கிரம் சரியாக சில மருத்துவர்களும், பெரும்பாலான போலி மருத்துவர்களும் ஸ்டெராய்டு, டைக்லோபினாக், பாராசிட்டமால் ஊசிகளை போடுகிறார்கள். ஸ்டெராய்டு ஊசி போடுவதால் காய்ச்சலின் காரணம் சரியாகாது. ஸ்டெராய்டு ஊசியால் காய்ச்சல் அப்போது குறையுமே தவிர உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

டைக்லோபினாக் காய்ச்சல் மருந்து கிடையாது அது வலி நிவாரணி. இந்த ஊசிகளை காய்ச்சலுக்கு போட்டால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். 
அதனால் டைக்லோபினாக், ஸ்டெராய்டை காய்ச்சலுக்கு ஊசியாகவோ, மாத்திரையாகவோ எடுத்துக் கொள்ள வேண்டாம். பாரசிட்டமால் காய்ச்சல் மருந்து தான். அதை மாத்திரையாக உட்கொள்ளலாம். ஆனால் ஊசியாக போட்டால் வலி தான் அதிகம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும். காய்ச்சலுக்காக மருத்துவர்களிடன் சென்றால் அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் பெற்று சாப்பிடுங்கள். மருந்து, மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் குறையாவிட்டால் மிதமான வெந்நீரில் துணியை நனைத்து நெற்றி, முகம், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்தால் காய்ச்சல் விரைவில் குறையும்.

மருத்துவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து காய்ச்சலுக்கு தேவையில்லாத ஊசிகளை போடாமல் இருக்க வேண்டும் என்றார்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)