பிரபல கல்வியாளரும், தொழிலதிபருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் இன்று மாலை சென்னையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
கல்வியாளராக, தொழிலதிபராக, பல்வேறு சேவை நிறுவனங்களை நடத்தி வந்தவருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான், சென்னையில் உள்ள பிரபல கிரசென்ட் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ஆவார். தமிழகத்தில் பொறியியல் கல்வியில் புதிய புரட்சியை ஏற்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1927ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் பிறந்தவரான அப்துர் ரஹ்மான், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பொறியியல் கல்லூரிகள், பிற கல்லூரிகள், பள்ளிகளை நிறுவிய கல்வித்துறையில் பெரும் சேவை புரிந்தவர். அதேபோல மருத்துவமனைகள் பலவற்றையும் இவர் நிறுவியுள்ளார்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் துபாயிலும் தனது தொழில் பங்களிப்பை அளித்தவர் அப்துர் ரஹ்மான். துபாயின் மிகப் பிரபலமான ஈடிஏ குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர். அந்த குழுமத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.
தனது சீதக்காதி டிரஸ்ட் மற்றும் ஜக்காத் நிதி கழகம் மூலமாக பல்வேறு தான தர்மங்களிலும் ஈடுபட்டு வந்தார் பி.எஸ். அப்துர் ரஹ்மான்.
Advertisement



ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை நசீபாக்க நாம் அனைவரும் துஆ செய்யுவோம் ...இவரின் நிறுவங்களில் ஜாதி மதம் இல்லா அனைவருக்கும் வேலைவாய்ப்பு ...
ReplyDeleteஉலகில் ஒரு தலைசிறந்த தொழில் அதிபர் மதநல்லிணக்கம் பேணுவதிலும் தர்ம சிந்தனைகளிலும் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கொண்டவர் ..அரபு நாடுகளுக்கு முன்பு கிழக்கு ஆசிய நாடுகளான புருனை ,மலேசிய ,சிங்கபூர் ,தாய்லாந்த் ,ஜப்பான் ,ஹாங்காங் போன்ற நாடுகளில் தனது தொழிலில் கொடிகட்டிபறந்தவர்.இவரின் வரலாற்று முன்னேற்றம் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு வரப்பிரசாதம் .இவர் புதைக்க படவில்லை மாறாக விதைக்கபட்டுள்ளார்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
ReplyDeleteஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!
ReplyDeleteஉலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
குவைத்தில் வரும் வெள்ளிக்கிழமை (09.01.2015) அன்று K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.
நன்றி! வஸ்ஸலாம்.
அன்புடன்....
மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.
துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream): http://www.ustream.tv/channel/ktic-live
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete