அதிரை பேருந்து நிலையத்தில் உள்ள டேக்ஸி மார்க்கெட் காதிர் முகைதீன் பள்ளி எதிரே இடமாற்றம் செய்ய முடிவு!

3


அதிரை பேருந்து நிலையத்தில் வாடகை கார்கள் பல வருடங்களாக நிறுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம். இந்நிலையில் தற்பொழுது அதிரை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தில் நிலையத்தில் டேக்சிகளை நிறுத்துவது குறித்து அதிரை பேரூராட்சிக்கும் பேருந்து நிலைய டேக்ஸி மார்க்கெட் உரிமையாளர்கள் சங்கத்துக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தை பட்டுக்கோட்டை RDO அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் அதிரை பேரூராட்சி சார்பாக தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, பேரூராட்சி செயலாளர், கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார், அப்பியான் (எ) யூசுஃப், அப்துல் லத்தீப் ஆகியோரும் டேக்சி உரிமையாளர்கள் சார்பாக தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் கலந்துக்கொண்டனர். இன்று காலை 10 மணியளவில் துவங்கிய இந்த பேச்சு வார்த்தை நீண்ட விவாதங்களுக்கு பிறகு 12.15 மணியளவில் நிறைவடைந்தது.

இறுதியில் அதிரை காதிர் முகைதீன் பள்ளி அருகே முத்தம்மாள் தெரு எதிரே புதிய டேக்ஸி மார்க்கெட் அமைப்பது என்று சுமுகமாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கூடிய விரைவில் பேரூராட்சி சார்பாக கட்டப்பட்ட கடைகள் திறக்கப்படும் என எதிர்ப்பாக்ப்படுகிறது.



Advertisement

Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment