இன்று காலை துபை வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பில் கவியரங்கில் “தாய்மை” என்னும் தலைப்பில் என் கவிதை

0



 இன்று காலை துபை வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பில் கவியரங்கில் “தாய்மை” என்னும் தலைப்பில் என் கவிதை



மானிடர்கள் தங்கிவந்த ஆலயமே  தாய்மை
 .........மாதவத்தில் கூடிவரும் மாவரமே தாய்மை
தானிடரைத் தாங்கிவரும் பேரன்பே தாய்மை
 ..........தாலாட்டின் பாடலிசை தரும்சுகமே தாய்மை
தேனமுதத் தாய்ப்பாலில் அன்பூறும் தாய்மை
........தேடாமல் கிடைத்திட்ட செல்வம்தான் தாய்மை
ஊனிலெங்கும் கலந்துவரும் உயிரோசை தாய்மை 
........உடலுக்குள் உயிருடலை ஏந்திவந்த தாய்மை


இறையவனின் கருணைக்கும் ஒப்புவமை தாய்மை
 ..........இன்பமுள்ள சுவனத்தின் முதற்படியே தாய்மை
நிறையுளமாய் வேண்டுவதும் ஈன்றெடுத்த தாய்மை
 .........நீமறந்த போதினிலும் உனைமறவாத் தாய்மை
குறைகளெலாம் மன்னித்துப் போற்றுவதும் தாய்மை
..........கூப்பிட்ட குரலுக்கு விடைகூறும் தாய்மை
மறைந்திருந்தும் வாழ்த்துவதில் இணையற்ற தாய்மை
..........மதிப்பளிக்க முதலிடமாய் ஆகியதும் தாய்மை


“கவியன்பன்” கலாம்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)