சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர் அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்.
அங்கு இப்படியொரு பள்ளி இருப்பது பலருக்கும் தெரியாததால் அங்கு சிகிச்சை பெரும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தங்களின் 5 வேலை தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு சிரமமான சூழலே இருந்து வந்தது.
இந்த பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைகான அழைப்பு விடுக்கபடுவதில்லை. (காரணம் இருதய அறுவை சிகிச்சை அரங்கிற்கு அருகில் உள்ளதால்.)
இது பற்றி அங்கு பணிபுரியும் புற்றுநோய் பிரிவு மருத்துவர் மதார்ஷா நம்மிடம் கூறும் பொழுது....
இந்த பள்ளிவாசலை இங்கு பணிபுரியும் ஒருசில இஸ்லாமிய மருத்துவர்களால் அரசுக்கு கோரிக்கை வைத்து அனுமதி வாங்கி நிர்வகித்து வருகிறோம்.இதற்குண்டான செலவீனங்களை பணிபுரியும் மருத்துவர்களே வழங்குன்றனர். இதிலிருந்து கிடைக்கும் தொகையிலிருந்து ஒரு இமாம் மற்றும் மோதினார் உள்ளிட்டவர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம்.
இந்த பள்ளியிலேயே பெண்கள் தொழுகைக்கு தனியிடம் உள்ளது. இந்த பள்ளியில் 5 வேலை தொழுகையும் வாரந்திர ஜும்மாவும் நடைபெறுகிறது என்றார் அவர்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது