சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் நமதூரை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் நமதூர் மாணவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் சிறப்பாக செயல்பட்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை புதுக்கல்லூரியில் நடைப்பெற்ற மாபெரும் விளையாட்டு விழா நிகழ்ச்சியில் அக்கல்லூரியில் B.B.A 3ஆம் ஆண்டு படித்து அதிரை சுரைக்காய் கொள்ளை பகுதியை சேர்ந்த ஹாஜா நஜுமுதீன் அவர்களின் மகனாகிய முஹம்மது அஜாருத்தீன் என்ற மாணவர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று பிற மாணவர்களை அதிக புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார்.
இவர் 200 மற்றும் 400 மீட்டர் ஒட்டப்பந்தையத்தில் முதலிடமும், கைப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகளில் இவரது அணி முதலிடமும், ஈட்டி எரிதல், 1500 மீட்டர் ஓட்டப் போட்டி மற்றும் உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் இரண்டாம் இடமும் பெற்று அனைத்து மாணவர்களையும் விட அதிகமாக 19 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார். மேலும் இவர் அதிரை AFFA கால்பந்து அணியை சேர்ந்த வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல் இக்கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வரும் அதிரை சுரைக்காய் கொல்லை பகுதியை சேர்ந்த அஹமது பஷீர் அவர்களின் மகன் முஹம்மது அப்துல்லாஹ் என்ற மாணவர் குண்டு எரிதல் மற்றும் வட்டி எறிதல் போன்ற போட்டிகளில் முதலிடம் பெற்று அசத்தினார். இவர் அதிரை AFCC கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
நமதூர் மாணவர்கள் பல்வேறு ஊர்களில் உள்ள பல கல்லூரிகளில் தங்கள் விளையாட்டுத் திறமையை நிருபித்து பெற்றோர்களுக்கும் அதிரைக்கும் பெருமை தேடி தருகின்றனர்.
இவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பது நமது கடமை. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிரை பிறை பிறையின் பாராட்டுக்களைப் தெரிவித்துக் கொள்வதுடன் இவர் வருங்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக மின்னிட வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்....நூருல் இப்னு ஜஹபர் அலி(அதிரை பிறை)
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது