https://clyp.it/cpp3o3ri
இசைமுரசின்
இன்னொலி
இன்று ஓய்ந்தது!
நாகூரின் வானம்பாடி
நாயனைத் தேடி ஓடியது!
சிங்கக் குரலோனின்
சங்கநாதம் எங்கே கேட்போம்?
மரபுப் பாக்களின் ஓசையும்
அரபு மொழியின் அழகு நயமும்
எவர்தான் இனிமேல்
இவர்போல் ஒலிப்பார்?
பிலால்(ரலி) அவர்களின்
மரணத்தைப் பற்றிப் பாடி
பிழிய வைத்த குரலே
உன்றன் மரணத்தால்
உடைந்துவிட்டது இதயமே!
ஓடி வருகின்றான்
உதயச் சூரியன் என்று
பாடிய பாட்டால்
பட்டி தொட்டியெல்லாம்
கட்சியை வளர்த்தாய்!
கண்ணியமிகு
காயிதேமில்லத்(ரஹ்)
கண்ணீருடன் கேட்பார்கள்
உன்னிடமிருந்து
உருகும் பாடலை
இறைவனிடம் கையேந்துங்கள்
இந்து முஸ்லீம் வேறுபாடின்றி
நிறைவுடனே யாவரையும் பாட வைத்து
நிம்மதியாய்ச் சென்று விட்டாய்!
ஆரத்தழுவி ஆவி பிரிய
ஆண்டுகள் பல முன்பே
ஆசைப்பட்டது
இன்று நிறைவேறியதோ
இறைவனும் , இரசூலும்(ஸல்)
இரசித்த பாடல்கள் அல்லவா
இதயக் கூட்டிலிருந்து வந்தவைகள்!
மண்ணறைக்குட் சென்றாலும்
மண்ணகம் மறவாது
மங்காது உன்றன் கீதம்!
மரணத்தை நினைவூட்டினாய்
மரணித்த பின்னும்
மரணத்தை நினைவூட்டுவாய்
மறக்க முடியாத உன்றன் பாடல்களால்!


மேற்காணும் கவிதாஞ்சலியை என் கவிதை வரிகளை, தன் உருக்கமான குரலில் பாடியுள்ளார் சகோதரர், புதுசுரபி ரஃபீக் (முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்) இந்தச் சுட்டியைச் சொடுக்கிக் கேளுங்கள்https://clyp.it/cpp3o3ri
ReplyDeleteகுரல் கதிரவனின் ஒளிபெற்றே, மற்றப் பாடகச் சந்திரன்கள் இவரின் குரலொலியின் கதிர்வீச்சைப் பெற்று உலா வந்தாலும், இந்த ஆளுமை மிக்க ஆதவனை மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ இயலாத வண்ணம் வாழ்வின் இறுதி நாள் வரைக்கும் அதே “கணீர்”என்ற குரலுக்குரியவராய்த் திகழ்ந்தார் என்பதே வியப்பிலும் வியப்பு; மெய்மையிலும் மெய்மையாகும்!!
ReplyDeleteமரபுப் பாக்களின் ஓசை நயமும், அரபுச் சொற்களின் அழகு உச்சரிப்புகளும் இவரின் நாக்கு வழியாக நயம்பட வெளிவந்தன; இந்த நாகூராரின் நா- கூர் என்பதற்கு இதுவே காட்டாகும்.
இறையருட்கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கஃபூ சாகிப், கிளியனூர் கவிஞர் அப்துஸ்ஸலாம், நாகூர் கவிஞர் சலீம் ஆகியோரின் மரபிலக்கணம் வழுவாத ஓசை நயமிக்க வரிகளின் கவிதைச் சமையலை, இந்தப் பாடகரின் நாவால் பாடல் வரிகள் விருந்து பறிமாட்டப்பட்டதால், எழுதியவர்களின் வரிகள் கூட இந்தப் பாடகரின் வரிகள் தான் என்று மக்கள் நினைக்கும் வண்ணம் இன்றும் ”இறைவனிடம் கையேந்துங்கள்” என்னும் பாடலுக்குரியவர் இவர்தான் என்று மக்கள் நினைக்கின்றனர்(இவரின் வரிகள் என்றே நினைக்கின்றனர்) அந்த அளவுக்கு எழுதியவரை விட அதனைப் பாடிய இவர் எழுச்சிப் பெற்றார்; இதுவே இவரின் திறமைக்குக் காட்டாகும்
பா, கூர்மை பெற்றுப் பளிச்சிடவே பாடியது
நாகூர் ஹனிபாவின் நா.
என்னைப் போன்ற மரபுக் கவிஞர்களுக்கு இவரின் இறப்பு ஓர் அதிர்ச்சியான பேரிழப்பாகும். ஆம். எங்களின் மரபின் ஓசைக்கு மடங்கும் நா கூரான நாகூர் ஹனீபா இல்லாமல் எங்கள் பாக்களை இத்துணை அழகாக உச்சரித்துப் பாட யார் உண்டு இவர் போல்?