அதிரை மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி!!! (வீடியோ இணைப்பு)

Editorial
1

அதிரையில் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவவசதியை ஏற்படுத்தக்கோரி அதிரை பொதுமக்கள் சார்பாக சம்பந்தப்பட்டநிர்வாகத்திடம் பொதுமக்களால் பலவாறு கோரிக்கைகள்முன்வைக்கப்பட்டதுஇருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும்எடுக்கப்படாத காரணத்தால் அதிரை மக்கள் ஒன்று திரண்டு மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினர்அதில் இந்தகோரிக்கை நிறைவேற்றப்படவில்லையானால் சாலை மறியல்நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது. கோரிக்கைநிறைவேற்றப்படாத காரணத்தால் சாலை மறியல் செய்வதற்க்குஅறிவிப்புகள் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட பட்டுக்கோட்டை கோட்டாட்சியர்அதிரை மக்களை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து சமாதானபேச்சு வார்த்தை நடத்தினார்அதில் அதிரை அரசு மருத்துவமனைக்குவிரைவில் 24 மணி நேர மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டு இரவுநேரத்தில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார் என உறுதியளித்தனர்.இதனை அடுத்து சமாதான பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்துபொதுமக்கள் அதிரை திரும்பினர்அதிரையின் சில வெப்சைட்டுகளிலும்அதிரைக்கு 24 மணி நேர மருத்துவ சேவை கிடைத்ததுஎன்றெல்லாம்செய்திகள் பதிந்தனர்இதை பார்த்த பொதுமக்களும் வெளிநாடு வாழ்அதிரைகளும் ஆறுதல் அடைந்தனர்.


இருப்பினும் அவர்கள் உறுதியளித்தவாறு மருத்துவரை நியமிக்காதகாரணத்தால் பொதுமக்கள் இன்று ஒருநாள் அடையாளஉண்ணாவிரதத்தை அதிரை அரசு மருத்துவமனையின் எதிரில்துவங்கியுள்ளனர்காலை 9 மணியளவில் துவங்கிய இதில் பலர்கலந்துக்கொண்டனர்.

இதனை அடுத்து காலை 11:30 மணியளவில் உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு வந்த தாசில்தார் அவர்களும், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் மீனாட்சி அவர்களும் இம்மாதம் 30ம் தேதிக்குள் மருத்துவர் நியமிக்கப்படுவார். இரவு நேரத்தில் பெண் மருத்துவர் ஒருவரை நியமிக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார். இதனை அடுத்து சுற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அனைவரும் ஆறுதல் அடைந்தனர். இதனை அடுத்து அதிரை சேர்மன் அஸ்லம், சுற்றி இருந்த கிராம தலைவர்கள், ஜமாத் தலைவர்கள் உண்ணாவிரத்தை கலைத்தனர்.

இது குறித்த வீடியோ.....

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அதிரை தகவலை அருமையாக தந்தீர்கள் ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
Post a Comment