எனதருமை சவூதி வாழ் தொழிலாளர் சொந்தங்களே,நாம் பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி நமது தாய்,தந்தை,மனைவி,பிள்ளைகள்,உறவுகளை பிரிந்து உழைக்க வந்துள்ளோம்.
நம்மை சுற்றி ஒருசில நேரத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதுண்டு.அது நமக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும். ஆனாலும் நம்மில் சிலபேர் அதை பற்றியே பெரிய அளவில் உடனிருப்போரிடமும்,அலைபேசி வாயிலாக தமது குடும்பத்தாருடனும் விவாதிப்பதுண்டு.
சிலநேரத்தில் இதுவே நமக்கு எதிராகவும் திரும்பிவிடும்.அதனால் நமது நிம்மதி சீர்குலைந்து தேவையற்ற பிரச்சினைகளை சுமக்க நேரிடும்.
நமது உறவுகளை தவிர்த்து வேறு யாரிடமும் நமது செல்போனை கொடுத்துவிடக் கூடாது. யாராவது ஒருவர் நமது செல்போனில் மிஸ்டுகால் கொடுக்க சொல்லியோ,ஒரு SMS அனுப்ப சொல்லியோ போன் கேட்டால் கொடுத்து அபாயகரமான சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்.
சவூதியை சுற்றியுள்ள ஒருசில நாடுகளில் விரும்பத்தகாத உள்நாட்டு கலவரம் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் யாராவது ஒருவர் நமது செல்போன் மூலம் சவூதி அரசுக்கு எதிரான வார்த்தைகளை உரையாடல் மூலமோ அல்லது SMS மூலமோ பரப்பி விட்டால் அதன் பாதகமான முடிவுகள் யார் பெயரில் சிம் கார்டு உள்ளதோ அவர்களையே சேரும்.
இதே போன்றுதான் பேஸ்புக்,வாட்ஸப் போன்றவையும்.நமது செல்போனிலிருந்து ஏதேனும் ஒரு சட்டவிரோத தகவலை மற்றவருக்கு அனுப்பிவிட்டாலும் அதற்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும்.
நமது செல்போன் தொலைந்து விட்டாலோ?அல்லது யாரேனும் களவாடி விட்டாலோ?சிறிதும் தாமதமின்றி அருகில் உள்ள சிம்கார்டு நிறுவனத்தில் புகார் அளித்து அதன் செயல்பாட்டை முடக்கி விடவேண்டும்.
வளைகுடாவில் பாதிக்கப்பட்ட ஒருவரின் அழுகுரலிலிருந்து கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
தகவல்:கீழை ஜஹாங்கீர் அரூஸி

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது