
கோடை வெயிலின் தாக்கத்தினால், அதிகம் வியர்த்து, உடல் அதிகமாக வெப்பமடைகிறது. இந்த நிலை வீட்டை விட்டு வெளியே சென்றால் மட்டுமின்றி, வீட்டிற்குள்ளேயே இருக்கும் போதும் அப்படி தான் உள்ளது. மேலும் இக்காலத்தில் சருமத்தில் அதிகப்படியான பிரச்சனையை சந்திக்கக்கூடும். அவற்றில் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் முகப்பரு போன்றவை முக்கியமானவை.
அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் என்றால் அவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கும். இந்த நிலையில் அவர்கள் அந்த முகப்பருக்களை போக்கவும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையையும் போக்க பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இங்கு எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கோடையில் சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்து பாருங்கள்.
வேப்பிலை, ரோஸ்வாட்டர் மற்றும் ஆரஞ்சு
ஒரு பௌலில் வேப்பிலை பவுடர், ஆரஞ்சு பொடி மற்றும் முல்தானி மெட்டி சேர்த்து, 1 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்த, பின் குளிர்ந்த நீரில் கழுவி வேண்டும்.
ஆரஞ்சு மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு 3 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றம் 1 டீஸ்பூன் முட்டை அல்லது தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
அரிசி மாவு மற்றும் மஞ்சள் தூள்
ஒரு சிறிய பௌலில் 3 டீஸ்பூன் அரிசி மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் தேன் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொண்டு, சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
பாதாம் மற்றும் தேன்
இரவில் படுக்கும் முன் 10 பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
தக்காளி ஜூஸ்
தக்காளியை அரைத்து சாறு எடுத்து, அதில் 3 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்
முல்தானி மெடி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து, பின் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து துடைத்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது